ஆன்லைன் ஷாப்பிங் அனுபவத்தையே மாற்றும் ஃப்ளிப்கார்ட்டின் புதிய கண்டுபிடிப்பு!

Flipkart Launches Smart Assistant Saathi : இது அமேசானின் அலெக்ஸா போன்று செயல்படுவதில்லை. உங்களால் இதனுடன் நேரடியாக உரையாட இயலாது.

Mohammad Faisal

Flipkart Launches Smart Assistant Saathi:  முதல் முறையாக ஃப்ளிப்கார்ட்டின் செயலியை பயன்படுத்தும் நபர்களுக்கு உதவும் வகையில் ஸ்மார்ட் அஸிஸ்டிவ் இண்டெர்ஃபேஸினை உருவாக்கியுள்ளது ஃப்ளிப்கார்ட் நிறுவனம். வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை தருவதற்காக ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி வாயிலாக உதவி செய்ய வருகிறது இந்த அஸிஸ்டிவ். கிராமப்புறங்களில் இருக்கும் வாடிக்கையாளர்களையும், இரண்டாம் மற்றும் மூன்றாம் தர நகரங்களில் இருக்கும் வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவும் இந்த அஸிஸ்டண்ட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

To read this article in English

ஒரு கடைக்கு அல்லது ஒரு ஷாப்பிங் மாலுக்கு நீங்கள் சென்றால் உங்களுக்கு உதவி செய்வதற்காகவே அங்கு சேல்ஸ்மேன்கள் இருப்பது வழக்கம். இந்த ஐடியாவை அப்படியே முழுதாக உட்கிரகித்துக் கொண்டு உருவானது தான் ஃப்ளிப்கார்ட் சாதி. டெக்ஸ்ட் மற்றும் ஆடியோ அடிப்படையிலான இன்ஸ்ட்ரெக்ஸ்சன்களை நாம் அளித்தால் நமக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்த ஃப்ளிப்கார்ட் சாதி செய்து முடித்துவிடும்.

விண்ணை தொட்ட வெங்காயத்தின் விலை. கவலையில் பொதுமக்கள்

ஃப்ளிப்கார்ட் செயலின் மேற்பகுதியில் அஸிஸ்டண்ட் ஐகான் அமைந்துள்ளது. இந்த ஐகானை நீங்கள் ஒரு முறை டச் செய்தால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று விஷுவல் மற்றும் வாய்ஸ் கெய்டெண்சை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். மேலும் என்னென்ன டீல்கள் அதற்காக இருக்கிறது என்பதையும் உங்களுக்கு உடனுக்குடன் அறிவித்துவிடும் இந்த செயலி. ஆனால் உங்களால் கூகுள் அஸிஸ்டண்டில் பேசியது போல் பேச இயலாது. என்னென்ன வாங்கலாம் என்பதை மட்டும் நமக்கு கூற உதவும் வகையில் மட்டும் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இது அமேசானின் அலெக்ஸாவில் இருந்து வித்தியாசப்படுகிறது. நாம் அலெக்ஸாவில் இந்த பொருளை ஆர்டர் செய்துவிட என வெப்சைட் பக்கம் செல்லாமலே ஆர்டர் செய்துவிடலாம். அலெக்ஸா நமக்காக, அமேசான் வெப்சைட்டில் நாம் தேடும் பொருள் இருக்கிறதா, எவ்வளவு ஸ்டாக் இருக்கிறது என்பதையெல்லாம் நமக்கு கூறிவிடும். வெறும் வாய்ஸ் கமெண்ட் மூலமாக நாம எளிதில் ஆர்டர் செய்துவிட இயலும். வருங்காலத்தில் ஃப்ளிப்கார்ட்டின் சாதியும் இது போன்று செயல்படலாம்.

மேலும் படிக்க : டிசம்பர் 1 முதல் அமலுக்கு வரும் நெட்வொர்க் கட்டண உயர்வு… தப்பிக்க வழி சொல்லும் ஏர்டெல்!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close