Galaxy Note 9 : சாம்சங் கேலக்ஸி நோட் 9 மற்றும் கேலக்ஸி S9+ ஸ்மார்ட்போன்களின் புதிய மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கேலக்ஸி நோட் 9 ஸ்நோ வைய்ட் ( Snow White ) என்ற பெயரில் தைவானில் வெளியிடப்பட்டது. டிசம்பர் 7ம் தேதி முதல் சாம்சங் உள்ளிட்ட இணைய தளங்களில் ப்ரீ - புக்கிங் ஆர்டர்கள் எடுத்துக் கொள்ளப்படும். டிசம்பர் 10ம் தேதி முதல் ஆஃப்லைனிலும் இந்த போன் விற்பனைக்கு வர உள்ளது.
Galaxy Note 9 நிறம் மற்றும் விலை
ஆல்பைன் ஒயிட் (Alpine White) நிறத்தில் வெளியாகும் இந்த போனின் இண்டெர்நெல் ஸ்டோரேஜ் திறன் 128 ஜிபி ஆகும். இதன் விலை 67,900.
அதே போல் கேலக்ஸி S9+ போன் போலரிஸ் ப்ளூ நிறத்தில் வெளியாகியுள்ளது. 64ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ்ஜூடன் வெளியாகும் இந்த போனின் விலை 64,900 ஆகும்.
Galaxy Note 9 சலுகைகள்
எச்.டி.எஃப்.சி வங்கியின் க்ரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் 6000 ரூபாய் வரையில் கேஷ் பேக் கிடைக்கும். உங்களின் பழைய கேலக்ஸி S9+ மற்றும் கேலக்ஸி நோட் 9 ஆகியவற்றைக் ரூபாய் 9000க்கிற்கு கொடுத்து எக்ஸ்சேஞ்ச் ஆபரில் புதிய போனை வாங்கிக் கொள்ளலாம்.
Galaxy Note 9 சிறப்பம்சங்கள்
6.4 இன்ச் QHD மற்றும் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்பிளே
ஸ்கிரீன் அஸ்பெக்ட் ரேசியோ 19:9
எக்ஸினோஸ் 9820 ப்ரோசசர் மற்றும் ஆண்ட்ராய்ட் 9 பை இயங்குதளம் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
4000mAh பேட்டரி
6ஜிபி RAM + 1டிபி வரை இண்டர்நெல் ஸ்டோரேஜ்ஜினை நீட்டித்துக் கொள்ளலாம்.
12 எம்.பி + 12 எம்.பி ரியர் கேமராக்களும், செல்பி 8 கேமராவும் இதில் பொருத்தப்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க : சாம்சங்