/tamil-ie/media/media_files/uploads/2019/06/D8TLUKzWkAED4e8.jpg)
Gaming Smartphone Nubia Red Magic 3
Gaming Smartphone Nubia Red Magic 3 : நூபியா நிறுவனத்தின் புதிய கேமிங் ஸ்மார்ட்போனான ரெட் மேஜிக் 3 இந்தியாவில் வருகின்ற 17ம் தேதி அறிமுகமாக உள்ளது. மிக சமீபமாகவே அறிமுக தேதியினை அறிவித்திருக்கிறது இந்நிறுவனம். ஆனால் எந்த தேதியில் இருந்து இந்த ஸ்மார்ட்போன்கள் விலைக்கு வருகின்றன என்பதை பற்றிய தகவல்கள் எதையும் தரவில்லை நூபியா.
Gaming Smartphone Nubia Red Magic 3 சிறப்பம்சங்கள்
ஏப்ரல் மாதம் சீனாவில் வெளியான இந்த போனின் விலை 2899 யுவான் ஆகும். இந்திய விலைப்படி ரூ.29,100. இதன் சிறப்பம்சங்களாக குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 855 ப்ரோசசர் பொருத்தப்பட்டுள்ளது.
90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷ் ரேட் டிஸ்பிளே
5000 mAh சேமிப்புத்திறன் கொண்ட பேட்டரி
உலகிலேயே கூலிங் ஃபேனோடு வடிவமைக்கப்பட்ட முதல் ஸ்மார்ட்போன் இது தான்.
6.65 இன்ச் ஃபுல் எச்.டி + எச்.டி.ஆர் ஏ.எம்.ஓ.எல்.ஈ.டி திரை கொண்டுள்ளது.
2340 x 1080 பிக்சல்கள் ரெசலியூசன்
கிராஃபிக்ஸ் யூனிட் அட்ரெனோ 640 ஜி.பி.யூ
ஸ்டோரேஜ் : 12 ஜிபி ரேம் / 256 இண்டெர்நெல் ஸ்டோரேஜ்
Be there! #RedMagic3#GodModeOn#17June2019https://t.co/afyXfIdFvTpic.twitter.com/uVZC47wRYq
— Red Magic India (@RedMagicIN) 10 June 2019
ஆண்ராய்ட் 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட சொந்த இயங்கு தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும்.
பின்பக்க கேமரா 48 எம்.பி. செயல்திறன் கொண்டவை. செல்ஃபி கேமரா 16 எம்.பி. செயல்திறன் கொண்டவை.
மேலும் இதில் ஃப்ரண்ட் பேசிங் ஸ்டிரியோ ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.