உங்க போன்ல இந்த ஆப் இருக்கா? உஷாரா இருங்க!

ஆனால் அதனை டவுன்லோடு செய்ய வேண்டாம் என பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது கூகுள்

Google CamScanner app removed from Google play store: கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து கேம்ஸ்கேனர் (CamScanner ) என்ற புகழ்பெற்ற பி.டி.எஃப் கன்வெர்ட்டர் ஆப்பை நீக்கியுள்ளது. அந்த செயலி தேவையற்ற வைரஸ்களை பரப்புதல் மற்றும் விளம்பரம் செய்தல் காரணமாக இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது அந்நிறுவனம். இதுவரை இந்த அப்ளிகேசனை 100 மில்லியனுக்கும் மேற்பட்ட முறை பயனாளர்கள் டவுன்லோட் செய்துள்ளனர்.

சமீபத்தில் காஸ்பெர்ஸ்கை நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், இந்த கேம்ஸ்கேனரின் புதிய அப்டேட்டில் வைரஸ் (malevolent Trojan Dropper module) இருப்பதை கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து கூகுள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதற்கு முன்பும் இதே போன்ற ஒரு வைரஸ், சீனாவில் இருந்து வெளியான போன்களில் ப்ரீ இன்ஸ்டால் செய்யப்பட்ட இந்த ஆப்பில் இருந்தது கண்டறியப்பட்டது. ஒருமுறை இந்த ஆப்பினை ஆக்டிவேட் செய்யும் போது, மேலும் மேலும் புதிய புதிய வைரஸ்கள் நம்முடைய செல்போனில் டவுன்லோடு ஆகத் துவங்குகின்றது.

மிகவும் ஆபத்தை விளைவிக்க கூடிய டேட்டாக்களைக் கொண்ட லைப்ரேரி மாடுலை கேம்ஸ்கேனர் சமீபத்தில் விளம்பரம் செய்ததை கண்டறிந்த கேஸ்பர்ஸ்கை நிறுவனம், கூகுளிடம் முறையிட, ஆப்பினை ரிமூவ் செய்து அறிவித்துள்ளது அந்நிறுவனம். ஏற்கனவே இருக்கும் பழையை கூகுள் வெர்சனில் கேம்ஸ்கேனர் எச்.டி மற்றும் கேம்ஸ்கேனர் ஆப்கள் இன்னும் செயல்பாட்டில் இருக்கலாம். ஆனால் அதனை டவுன்லோடு செய்ய வேண்டாம் என பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது அந்நிறுவனம்.

மேலும் படிக்க : Realme XT : வெளியானது உலகின் முதல் 64 எம்.பி. கேமரா ஸ்மார்ட்போன்… சிறப்பம்சங்கள் ஒரு பார்வை

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close