64 எம்.பி. கேமரா… அசர வைக்கும் டிசைன்… வெளியானது ரியல்மீயின் XT…

மிகவும் ஷைனிங்கான பின்புறத்தைக் கொண்டிருக்கும் இந்த போனில் X என்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

Realme XT smartphone review, specifications, price, availability
Realme XT smartphone review, specifications, price, availability

Realme XT smartphone review, specifications, price, availability : உலகின் முதல் 64 எம்.பி. கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் என்ற பெருமையை தட்டிச் செல்கிறது ரியல்மீயின் எக்ஸ்.டி. ஸ்மார்ட்போன். ரியல்மீ 5 மற்றும் ரியல்மீ 5 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் இருப்பதைப் போன்றே க்வாட் கேமரா செட்டப்பில் இந்த போன் வெளியாகியுள்ளது

Realme XT smartphone
Realme XT smartphone design

Realme XT smartphone Display

6.4 இன்ச அளவு கொண்ட இந்த ஸ்மார்ட்போன் Super AMOLED FHD+ திரையுடன் வெளியாகிறது. எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் பார்ப்பதற்கு தெளிவாகவும், துல்லியமான தகவல்களையும் அளிக்கிறது இந்த ஸ்மார்ட்போன். இந்த அளவுக்கே ஏற்ற பிரச்சனை என்னவென்றால் ஒற்றைக் கையால் இதனை ஆப்ரேட் செய்வது கொஞ்சம் சிரமமான காரியம் தான்.

 

64 எம்.பி. கேமரா செயல்பாடு எப்படி?

இதன் கேமரா குறித்து தான் அதிகம் எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் நிலவி வந்தது. கேமரா செட்டிங்க்ஸில் அல்ட்ரா 64 எம்.பி. என்ற ஒரு மோட் உள்ளது. அதனை பயன்படுத்தி நீங்கள் மிகவும் அழகான அதே நேரத்தில் மிகவும் தெளிவான துல்லியமான புகைப்படங்களை எடுக்கலாம். நீங்கள் எடுக்கும் புகைப்படத்தின் ஆப்ஜெட் என்ன நிறத்தில் இருக்கின்றதோ அதே நிறம் உங்கள் திரையிலும் தெரிவது தான் அதில் மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி. அதனால் உங்கள் போட்டோவிற்கான போஸ்ட் ப்ரோடெக்சனில் நீங்கள் அதிகம் கஷ்டப்பட வேண்டியதில்லை.

மேலும் படிக்க : இந்த வாரம் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள் ஒரு பார்வை?

Realme XT smartphone review, specifications, price, availability
Realme XT camera sample. (Image resized for web)

அவுட் டோரில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சிறப்பான ரிசல்ட்டை கொடுத்தன. குறைந்த ஒளியில் எடுக்கப்படும் புகைப்படங்களும் நல்ல முறையிலேயே வந்தது. ஆனால் செல்ஃபி கேமரா நன்றாக இருக்கின்றதே தவிர, மிகவும் சிறப்பான கேமரா அவுட் புட்டை தருகிறது என்று கூறிவிட இயலாது. அல்ட்ரா வைட், மேக்ரோ, போர்ட்ரைட், க்ரோமாபூஸ்ட், நைட்ஸ்பேஸ், போன்ற நிறைய மோட்களில் இந்த கேமரா செட்டிங்ஸ் நிரம்பி வழிகிறது.

Realme XT smartphone review, specifications, price, availability
Realme XT camera sample. (Image resized for web)

Realme XT smartphone review, specifications, price, availability – இதர சிறப்பம்சங்கள்

இந்த போன் ரியல்மீயின் ப்ரீமியம் போனாகவே வெளியாகியுள்ளது. கேமரா மட்டுமல்லாமல் இதர சிறப்பம்சங்களையும் மிகவும் யோசனை செய்து திட்டமிட்டு வடிவமைத்துள்ளது. இதில் ஸ்நாப்ட்ராகன் 712 ப்ரோசசர் பொருத்தப்பட்டுள்ளது.

பேட்டரி பேக்கப் 4000mAh கொண்டது

வூக் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் டெக்னாலஜியுடன் மினிட்ராப் டிசைனில் வெளியாகியுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

பெர்ல் ப்ளூ, மற்றும் பெர்ல் ஒய்ட் என்று இரண்டு நிறங்களில் வெளியாகியிருக்கும் இந்த போனை பாதுகாக்க கார்னிங் கொரில்லா க்ளாஸ் 5 இரண்டு பக்கத்திலும் பொருத்தப்பட்டுள்ளது.

மிகவும் ஷைனிங்கான பின்புறத்தைக் கொண்டிருக்கும் இந்த போனில் X என்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

Realme XT smartphone review, specifications, price, availability

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Realme xt smartphone review specifications price availability

Next Story
இந்தியாவில் 10ம் ஆண்டு கொண்டாட்டம்.. லிமிட்டட் எடிசன் பைக்கை வெளியிட்டு அசத்தல்Harley Davidson MY20 Street 750 limited edition
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X