இந்த வாரம் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள்... என்ன போன் வாங்க போறீங்க?

32 எம்.பி. செல்ஃபி கேமரா இந்த ஸ்மார்ட்போனின் கூடுதல் சிறப்பம்சம்.

Xiaomi Redmi Note 8 Pro Oppo Reno2 Vivo Z1X smartphones launching  this week : இந்த மாதத்தின் இறுதி வாரமான இந்த வாரத்தில் பட்ஜெட் வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு சியோமி, ஓப்போ, மற்றும் விவோவின் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது அந்த நிறுவனங்கள்.

கடந்த வாரம் ரியல்மீ 5, ரியல்மீ 5 ப்ரோ, சியோமியின் எம்.ஐ. ஏ3, மோட்டோவின் ஒன் ஆக்சன் போன்ற போன்கள் வெளியாகிய நிலையில் இந்த வாரம் ஓப்போவின் ரெனோ 2 ஸ்மார்ட்போன்கள் வெளியாகின்றன. சியோமியின் ரெட்மீ நோட் 8 சீரியஸ் ஸ்மார்ட்போன்கள் வெளியாகிறது. விவோவின் ஜி சீரியஸ் போனும் இந்த வார வெளியீட்டிற்காக காத்திருக்கிறது.

ஓப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் (Oppo Reno2 series India launch)

நாளை வெளியாகிறது இந்த ஸ்மார்ட்போன். க்வாட் கேமரா செட்டப்பில் வெளியாக இருக்கும் இந்த போனின் மாடல் பெயர் குறித்து இதுவரை உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.

ஓப்போவின் ரெனோ 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆகஸ்ட் 28ம் தேதி அறிமுகமாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் நான்கு கேமராக்களும் 20 மடங்கு அதிகப்படியான ஸூம் கெப்பாசிட்டியுடன் வெளியாக உள்ளது. ஓப்போ ரெனோ சீரியஸின் சிக்னேச்சர் ஷார்க்ஃபின் வடிவில் பாப் அப் செல்ஃபி கேமரா இதில் பொறுத்தப்பட்டுள்ளது.

இந்த போன் குறித்த முழுமையான சிறப்பம்சங்களை அறிந்து கொள்ள

சியோமி ரெட்மீ நோட் 8, நோட் 8 ப்ரோ

சியோமியின் புதிய நோட் சீரியஸ் போன்கள் சீனாவில் ஆகஸ்ட் 29ம் தேதி வெளியாக உள்ளது. இந்த போனுக்கான முன் அறிவிப்புகள் மட்டும் முன்பதிவுகள் சமீபத்தில் துவங்கியது. ஒரே நாளில் 15 லட்சம் வாடிக்கையாளர்கள் நோட் மீ 8 ப்ரோவை புக் செய்துள்ளனர்.

64 எம்.பி. கேமரா சென்சாருடன் வெளியாகும் ரெட்மி நோட் 8 ப்ரோ…

விவோ Z1X (Vivo Z1X)

விவோவின் Z சீரியஸின் புதிய போன் வெளியாக உள்ளதாக ஸ்மார்ட்ப்ரிக்ஸ் செய்தி அறிக்கை நமக்கு தெரிவிக்கின்றது. இந்த வார இறுதி அல்லது அடுத்த வாரத்தில் இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போனில் 48 எம்.பி சாம்சங் ஜி.எம். சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. 8 எம்.பி. வைட் ஆங்கில் சென்ஸ் மற்றும் 2 எம்.பி. டெப்த் சென்சாரும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. 32 எம்.பி. செல்ஃபி கேமரா இந்த ஸ்மார்ட்போனின் கூடுதல் சிறப்பம்சம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close