64 எம்.பி. கேமரா சென்சாருடன் வெளியாகும் ரெட்மி நோட் 8 ப்ரோ…

Redmi Note 8 Pro, Note 8 Smartphones Price : இந்த போனின் பேட்டரி 5000mAh சேமிப்புத்திறன் கொண்டுள்ளது.

By: Updated: August 22, 2019, 05:36:03 PM

Redmi Note 8 Pro, Note 8 Smartphones specifications : ரெட்மீ நோட் 8 மற்றும் நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் வருகின்ற 29ம் தேதி சீனாவில் வெளியாக இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 64 எம்.பி. கேமராவை கொண்டுள்ளது என்பது தான் இதன் முக்கியமான ஹைலைட் ஆகும்.

Redmi Note 8 Pro, Note 8 Smartphones specifications

எப்போதும் குவால்கோம் ப்ரோசசருடன் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன்கள் தற்போது மீடியாடெக் ப்ரோசசருடன் வெளியாக உள்ளது. Helio G90/G90T SoC இதில் பொருத்தப்பட்டுள்ளது.  தன்னுடைய கேமிங் ஸ்மார்ட்போனில் ஹேலியோ ஜி90 பொருத்தப்படும் என்ற அறிவிப்பை ஏற்கனவே சியோமி வெளியிட்டிருந்தது.  ஆனால் ஹேலியோவை நோட் சீரியஸில் பயன்படுத்தும் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

வெர்ட்டிக்களாக பொருத்தப்பட்டிருக்கும் கேமரா செட்டப்பிற்கு கீழ் எல்.ஈ.டி. லைட் ஒன்றும் பொறுத்தப்பட்டுள்ளது. பின்புறத்தில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரும் பொறுத்தப்பட்டுள்ளது. இந்த சீரியஸிலும் இன் – டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் இல்லை என்பது சற்று வருத்தம் அளிக்கிறது.

64MP Samsung ISOCELL Bright GW1 – கேமரா சென்சார் இதில் பொருத்தப்பட்டிருக்கிறது. 64 எம்.பி. கேமரா சென்சார்களைக் கொண்ட குவாட் கேமரா ஸ்மார்ட்போன்களை வரிசையாக இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ரெட்மீ நிறுவனம். ஏற்கனவே தீபாவளிக்கு முன்னதாக ரியல்மீயின் எக்ஸ்.டி. இதே எம்.பி. கொண்ட கேமரா சென்சார்களுடன் வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவித்துவிட்டது சியோமி நிறுவனம். இந்த போனின் பேட்டரி 5000mAh சேமிப்புத்திறன் கொண்டுள்ளது.

மேலும் படிக்க : இந்தியாவிற்கு மீண்டு(ம்) வரும் எச்.டி.சி… புதிய சவால்களை சமாளிக்குமா?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Redmi note 8 pro note 8 smartphones specifications will be launched on august

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X