இந்தியாவிற்கு மீண்டு(ம்) வரும் எச்.டி.சி… புதிய சவால்களை சமாளிக்குமா?

வி.ஆர். மற்றும் வைவ் ஹெட்செட்களுக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தது எச்.டி.சி என்பது குறிப்பிடத்தக்கது.

HTC comes back to Indian Smartphone market
HTC comes back to Indian Smartphone market

HTC comes back to Indian Smartphone market : இந்தியாவில் ஸ்மார்ட்போன்களுக்கான மார்க்கெட் மிகவும் பெரியது. இங்குள்ள மக்கள் தொகையையும், அவர்களின் செலவீனங்களைப் பொறுத்தும் தங்களின் இலக்கினை வைத்து ஸ்மார்ட்போன்களை விலைக்கு வைக்கின்றன அநேக நிறுவனங்கள். ஆப்பிள் மற்றும் ஒன்ப்ளஸ் மட்டும் இதற்கு விதிவிலக்கு.

அதிகப்படியான போட்டியை  சமாளிக்குமா எச்.டி.சி?

மற்ற அனைத்து நிறுவனங்களும் தங்களால் இயன்ற வரையில் பட்ஜெட் வாடிக்கையாளர்களை கவர புதுப்புது முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்காகவே ஓப்போ, விவோ, ரியல்மீ, சியோமி, நோக்கியா, சாம்சங் நிறுவங்கள் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட்டிருக்கும்.

இந்த பெரிய மார்க்கெட்டில் தாக்கு பிடிக்காமல் கடந்த ஆண்டு தங்களின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் நிறுத்திக் கொண்டது எச்.டி.சி. நிறுவனம். ஆனால் இந்த வருடம் மீண்டும் இந்தியாவிற்கு வர திட்டமிட்டுள்ளது எச்.டி.சி நிறுவனம். இந்தியாவில் எச்.டி.சி. என்ற பெயரில் போன்களை விற்க அனைத்து உரிமைகளையும் அந்நிறுவனம் வைத்திருந்தாலும் இன்னோன் டெக்னாலஜி ( Inone Technology ) என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம்.

அதிகரித்து வரும் சீன மாடல் போன்களின்ன் வரத்து, அதற்கு கிடைக்கும் உலகளாவிய அங்கீகாரம் போன்ற காரணங்களால் எச்.டி.சி. நிறுவனத்தால் நிலைத்து நிற்க இயலவில்லை. இந்திய ஸ்மார்ட்போன் சந்தைகளில் மட்டும் அல்லாது உலக சந்தைகளிலும் மோசமான படுதோல்வியை சந்தித்து எச்.டி.சி நிறுவனம். முழுக்க முழுக்க வி.ஆர். மற்றும் வைவ் ஹெட்செட்களுக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தது எச்.டி.சி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : சாம்சாங் நிறுவனத்தாலும் நிகழ்த்த முடியாத சாதனை… இந்தியாவில் சாம்ராஜ்யம் அமைக்கும் சியோமி!

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Htc comes back to indian smartphone market

Next Story
பெயருக்கு ஏற்றவாறே வடிவமைப்பைப் பெற்ற கர்ட்டிஸீன் ‘சைக்’ பைக்… விலையோ ரூ. 20 லட்சம்!Curtiss electric motor cycle Psyche specifications, price, launch, availability
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com