”உங்களுக்கு நன்றி” – மருத்துவ பணியாளர்களை கௌரவித்த கூகுள் டூடுள்

கூகுளோடு இணைந்து நாமும் நம் மருத்துவ பணியாளர்களுக்கு நன்றியை செலுத்துவோம்.

Google Doodle Thank you coronavirus helpers tech giant honours medical workers
Google Doodle Thank you coronavirus helpers tech giant honours medical workers

Google Doodle Thank you coronavirus helpers : கொரோனா தற்போது இந்தியாவில் மிகவும் தீவிரமடைந்து வருகிறது. ஏற்கனவே சீனா, ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகள் கடும் பேரிழப்பை சந்தித்து வருகின்ற நேரத்தில், இந்தியாவில் தினமும் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. பொதுமக்களை இந்த நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க அல்லும் பகலும் உழைத்து வருகின்றனர் மருத்துவ பணியாளர்கள்.

மேலும் படிக்க : ஆசையோடு கட்டிக் கொள்ள ஓடி வந்த குழந்தை… தடுத்து நிறுத்தி கண்ணீர் விடும் டாக்டர் அப்பா!

இவர்களின் இந்த அர்பணிப்பினை மதித்து, அவர்களை கௌரவப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம். மிகவும் முக்கியமான வரலாற்று சிறப்பு நாட்களில் கூகுள் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், கலைத்துறை, விளையாட்டுத்துறை,  அறிவியல் துறை சார் வல்லுநர்களை கௌரவிக்கும் வகையில் கூகுள் டூடுள் வெளியிடும். இந்த வகையில் இன்று ”To all doctors, nurses, and medical workers, thank you” என்று தன் சார்பில் நன்றியை வெளிப்படுத்தி, கௌரவித்துள்ளது கூகுள் நிறுவனம்.

மேலும் படிக்க : கொரோனா வார்டில் பணி : என் குழந்தைக்கு தாய்பாலும் தருவதில்லை – செவிலியர் உருக்கம்

பல்வேறு மருத்துவ பாதுகாப்பு கருவிகள் பற்றாக்குறையால் உலக நாடுகளில் மருத்துவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பெரும் பாதிப்பினை அடைந்து வருகின்றனர். அவர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் நலமுடன் வாழ வேண்டும் என்று பலரும் வேண்டிக் கொள்கின்றனர். கூகுளோடு இணைந்து நாமும் நம் மருத்துவ பணியாளர்களுக்கு நன்றியை செலுத்துவோம்.

மேலும் படிக்க : சிகிச்சை அளித்ததால் கொரோனா பாதிக்கப்பட்ட செவிலியர்… மீண்டு வந்து அதே வார்டில் சேவை!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Google doodle thank you coronavirus helpers tech giant honours medical workers

Next Story
Jio POS Lite: சிம்பிளா டவுன்லோடு பண்ணுங்க… வீட்டில் இருந்தபடியே சம்பாதிங்க!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com