Google Maps Update: கூகுள் தனது மேப்ஸ் சேவைகளில் புதிய அம்சங்களை சேர்த்துள்ளதாக அறிவித்துள்ளது, இது கோவிட்-19 தொடர்பான பயன கட்டுப்பாடுகள் குறித்து பயனர்களை எச்சரிக்கும். பயனர்கள் தங்களது பயணங்களை திட்டமிட இது உதவும் என கூகுள் நிறுவனம் கூறுகிறது. போக்குவரத்து எச்சரிக்கைகள் (transit alerts), மருத்துவ வசதி எச்சரிக்கைகள் (medical facility alerts) மற்றும் இன்னும் பல இந்த புதிய அம்சத்தில் அடங்கும்.
இந்த புதிய அம்சத்தை பெற பயனர்கள் தங்கள் கூகுள் மேப்பை Play Store. மூலமாக புதுப்பிக்க வேண்டும். இதை செய்வதற்கு பயனர்கள் Google Play Store க்கு சென்று Maps ஐ தேடி அந்த ஆப் பக்கத்தில் உள்ள புதுப்பிப்பைத் தட்டவும்.
இந்த வேலையை இனி வாட்ஸ் ஆப் செய்யும்: வங்கிக்கு போக வேண்டாம், புது ‘ஆப்’ தேவையில்லை
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ரயில் நிலையம் எவ்வளவு நெரிசலாக இருக்கக்கூடும் அல்லது பேருந்துகள் ஒரு குறிப்பிட்ட கால அட்டவனையின்படி இயங்குகின்றனவா போன்ற தகவல்களை சரிப்பார்க்க இந்த போக்குவரத்து எச்சரிக்கை (transit alerts) அம்சம் பயனர்களை அனுமதிக்கும். இந்த அம்சம் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரேசில், கொலம்பியா, பிரான்ஸ், இந்தியா, மெக்சிக்கோ, நெதர்லாந்து, ஸ்பெயின், தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் கிடைக்கிறது.
கோவிட்-19 சோதனைச் சாவடிகள், தேசிய எல்லைகளைக் கடப்பதற்கான கட்டுப்பாடுகள் ஆகியவற்றைப் பற்றிய விவரங்களும் இப்போது கூகுள் மேப்ஸில் உள்ளன. இந்த அம்சம் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிக்கோ ஆகிய இடங்களில் மட்டும் தான் கிடைக்கிறது.
ஒரு பயனர் மருத்துவ வசதி அல்லது கோவிட்-19 சோதனை மையத்திற்கோ வாகனத்தில் செல்கிறார் என்றால் இந்த ஆப் பயனரின் தகுதியை சரிப்பார்த்து அந்த மையத்தின் வழிகாட்டுதல்களை குறிப்பிடும். மருத்துவ வசதி எச்சரிக்கை அம்சம் இப்போது இந்தோனேசியா, இஸ்ரேல், பிலிப்பைன்ஸ், தென் கொரியா மற்றும் அமெரிக்காவில் மட்டும் தான் கிடைக்கிறது. அதேசமயம் சோதனை மைய எச்சரிக்கை அம்சம் இப்போது அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கின்றது.
இந்த தரவுகள் அனைத்தையும் உள்ளூர், மாநில மற்றும் மத்திய அரசுகளிடமிருந்து சேகரிப்பதாக கூகுள் கூறுகிறது. இந்த அம்சங்களுக்கு கூடுதல் மதிப்பு சேர்க்கவும் அதே நேரத்தில் அவற்றை அதிக நாடுகளில் கிடைக்கச் செய்யவும் உலகம் முழுவதும் உள்ள இதர அமைப்புகளுடன் தீவிரமாக பணியாற்றி வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
ஓராண்டு இலவசம்: ஜியோ அள்ளிவிடும் சலுகைகளைப் பாருங்க!
கோவிட்-19 உடன் போராட அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிற அம்சங்கள்
கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிறுவனத்தின் நெரிசல் கணிப்பு (crowdedness predictions) அம்சம் பயனர்கள் தங்களது போக்குவரத்து பற்றிய தகவல்களை உள்ளீடு செய்ய இப்போது அனுமதிக்கும். இதற்கு ஆப்பில் உள்ள Transit Details க்கு உள்ளே சென்று crowdedness predictions என்பதை சொடுக்க வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.