கூகுள் பிக்சல் 3 மேமரி மேனேஜ்மெண்ட் பிரச்சனைகள் : கூகுள் பிக்சல் 3 சீரியஸ் போன்கள் வெளியாகி மார்கெட்டில் செம்ம ஹிட் அடித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஏதாவது செயலிகளை அப்டேட் அல்லது டவுன்லோடு செய்தால் உடனே அந்த அப்ளிகேசன் கிராக் ஆகிவிடுகிறது. இதனை புகார்களாக தொடர்ந்து அளித்தனர் கூகுள் பிக்சல் வாடிக்கையாளர்கள்.
மேலும் படிக்க : கூகுள் பிக்சல் வாங்கினால் கூகுள் மினி ஸ்பீக்கர் இலவசம்
கூகுள் பிக்சல் 3 மேமரி மேனேஜ்மெண்ட் பிரச்சனைகள்
இதனைத் தொடர்ந்து 9 டூ 5 கூகுள் (9to5Google) என்ற பத்திரிக்கையில் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் இந்த பிரச்சனைகளை வரும் வாரங்களில் சாஃப்ட்வேர் அப்டேட் மூலம் நிறைவேற்றுவதாக அறிவித்திருக்கிறது.
அக்டோபர் மாதம் வெளியான இந்த போனில் சாஃப்ட்வேர் பிரச்சனைகள் இருப்பதாக சில வாடிக்கையாளர்கள் கூறியிருந்தனர். குறிப்பாக ம்யூசிக் மற்றும் கேமரா ஆப்களில் வேலை செய்து கொண்டிருக்கும் போது இதர ஆப்கள் வேலை செய்வதை நிறுத்திவிடுகின்றன.
குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த பிரச்சனைகள் சரி செய்யப்பட்டுவிடும் என காலக்கெடு எதையும் விதிக்கவில்லை கூகுள் நிறுவனம்.
மேலும் படிக்க : லோ லைட்டிங் போட்டோகிராபியில் அசத்தும் கூகுள் பிக்சல் 3 XL
குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 845 ப்ரோசசர் மற்றும் ஒற்றை பின்பக்க கேமராவும் இரட்டை செல்ஃபி கேமராக்களும் பொறுத்தப்பட்டிருக்கின்றன. கூகுள் பிக்சல் 3ன் ஆரம்ப விலை 71 ஆயிரம் ஆகும், ஹையர் எண்ட் என்றால் அதன் விலை 80 ஆயிரம் ஆகும். கூகுள் பிக்சல் 3 XLன் விலை ரூ. 83,000 ஆகும். ஹையர் எண்ட் போனின் விலை ரூ. 92,000 ஆகும்.