Google Pixel 3A 3A XL Launch May 7 : கூகுள் நிறுவனத்தின் டெவலப்பர் மாநாடு வருகின்ற 7ம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்வில் புதிய ஸ்மார்ட்போன்களான பிக்சல் 3ஏ மற்றும் 3ஏ எக்ஸ்.எல். வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் இந்த போன் ப்ளூடூத்தின் SIG சான்றிதழை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போன் ப்ளூடூத் 5.0 வெர்சனை கொண்டிருக்கும்.
ப்ளூடூத் SIG சான்றிதழ்
இந்நிலையில் இந்த போனிற்கான நோட்டிஃபை மீ என்ற பக்கத்தினை உருவாக்கியுள்ளது ஃபிளிப்கார்ட் இணைய தளம். இதன் மூலம் இந்த போன் மிக விரைவில் விற்பனைக்கு வர உள்ளது தெளிவாகிறது. அந்த பக்கத்தில் வரும் டீசரானது “Help is on the way. Something big is coming to the Pixel universe. Know more on 8th May” என்ற வாக்கியங்களை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Google Pixel 3A 3A XL Launch May 7
சான்ஃபிரான்சிஸ்கோவில் பசிபிக் நேரப்படி இந்த ஸ்மார்ட்போன் மே 7ம் தேதி பகலில் வெளியாகிறது. இந்திய நேரப்படி அந்த போன் மே 8ல் தான் அறிமுகமாகிறது. இரண்டிற்குமான கால வித்தியாசம் அதுவாகும். குறைந்த வெளிச்சத்தில் மிகவும் சிறப்பான புகைப்படங்களை எடுப்பதற்கு வசதியாக பல்வேறு மாற்றங்களை கொண்டிருப்பதாக இந்த போன் குறித்த தகவல்கள் வெளியாகின.
பிக்சல் 3 போன்றே இந்த போன்களும் வடிவமைப்பைப் பெற்றுள்ளது என்றும், குவால்கோம் ப்ரோசசர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றும், க்ளாஸ் மெட்டிரியலுக்கு பதிலாக ப்ளாஸ்டிக் மெட்டிரியல் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுகிறது.
சியோமியின் புதிய போன் : 32 எம்.பி. செல்ஃபி கேமராவுடன் ஒரு ஸ்மார்ட்போன்… அதுவும் ஆச்சரியப்படும் விலையில்!