scorecardresearch

பிக்சல் 3ஏ வெளியீட்டிற்கு முன்பே அறிமுகமாகின்றதா கூகுள் பிக்சல் 4?

ஆண்ட்ராய்ட் க்யூ என்ற ஆப்ரேட்டிங்க் சிஸ்டத்தில் இந்த போன் இயங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Google Pixel 4 Specifications, Release date, design, features and more
Google Pixel 4 Specifications, Release date, design, features and more

Google Pixel 4 Specifications, Release date, design, features : இந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது கூகுள் பிக்சல் போன்களின் அடுத்த வெர்ஷன். ஆனால் சிலரோ கூகுள் பிக்சல் 3ஏ வெளியாவதற்கு முன்பே பிக்சல் 4 வெளியாவதற்கான வாய்ப்புகள் உருவாகிவிட்டதாக அவர்கள் அறிவித்து வருகின்றனர்.

தற்போது வரை வெளியான தகவல்களின் அடிப்படையில் கூகுள் பிக்சல் எப்படி இருக்கும் ?

முழுக்க முழுக்க கறுப்பு நிறத்தில் வெளியாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

பின்புறத்தில் கூகுளின் சின்னம் கீழ் பகுதியிலும், சதுர வடிவில் கூகுளின் மோடியூலும் அமைந்திருக்கும்.

மேலும் இரண்டு எல்.ஈ.டி. ஃப்ளாஷ் இதில் பொருத்தப்பட்டுள்ளது. Noise cancellation அல்லது ஆட்டோ ஃபோகஸிற்காக பயன்படுத்தவதற்காக இரண்டு பம்ப்கள் அதில் உள்ளன.

பின்புறத்தில் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனருக்கான மாட்யூல் இல்லை என்பதால் இன் ஸ்கிரீன் ஃபிங்கர் பிரிண்ட் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

பிக்சல் 4 போன் குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 855 ப்ரோசசருடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 6ஜிபி ரேம்/128ஜிபி இண்டர்நெல் ஸ்டோரேஜ் கொண்டிருக்கலாம்.

ஆண்ட்ராய்ட் க்யூ என்ற ஆப்ரேட்டிங்க் சிஸ்டத்தில் இந்த போன் இயங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க : கூகுள் பிக்சல் 4 மற்றும் 4XL ஸ்மார்ட்போன்களின் கோட்நேம்ஸ் தெரியுமா?

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Google pixel 4 specifications release date design features and more