GoPro launches Hero8 Black, Max 360 action cameras
GoPro launches Hero8 Black, Max 360 action cameras : யூடியூப் மற்றும் வ்லோக்கர்களை கவரும் வகையில் இரண்டு புதிய ஹாட்டான கேமராக்களை அறிமுகம் செய்துள்ளது கோ-ப்ரோ நிறுவனம். குறும்படம், ஃபீச்சர் வீடியோக்கள் எடுப்பவர்களுக்கு மிகவும் வசதியான ஒன்றாக இந்த கேமரா இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
Advertisment
ஆக்சன் கேமராக்களை வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டும் கோ ப்ரோ நிறுவனம் தற்போது இரண்டு புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்பு வெளியான கேமராக்களை விட 14% எடை குறைவான கேமராக்கள் இது என்பது குறிப்பிடத்தக்கது. கோ ப்ரோ மேக்ஸ், ஃப்யூசனின் நெக்ஸ்ட் வெர்சனாக வெளியாகியுள்ளது. இந்த கேமராவால் உங்களால் 360 டிகிரி வீடியோக்களை கேப்சர் செய்ய இயலும்.
இந்த கேமரா மூலம் நீங்கள் 12 எம்.பி. வரையில் எச்.டி.ஆர் வீடியோக்களை எடுக்க இயலும். குறைவான வெளிச்சம் இருக்கும் சூழலிலும் சிறப்பான வீடியோ அவுப்புட்டினை தருகிறது இந்த கேமரா. ஹைப்பர் ஸ்மூத் 2.0 வீடியோ ஸ்டெப்லைசேசனைக் கொண்டுள்ளதால் 4K ரெசலியூசனில் எடுக்கப்படும் வீடியோக்கள் மிகவும் சிறப்பு மிக்கதாக உள்ளது. ஸ்லோமோசன் வீடியோவை நீங்கள் அல்ட்ரா எச்.டி. ரெசலியூசனில் கேப்சர் செய்து கொள்ள முடியும். தற்போது ப்ரீ ஆர்டரில் நீங்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். அக்டோபர் 20ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது இந்த கேமரா. இதன் விலை 36,500.
GoPro Max
இரண்டு லென்ஸ்கள், முன்பக்க தொடுதிரை என அசத்தல் பேக்கேஜாக வெளியாகியுள்ளது இந்த கேமரா. இதன் மூலம் நீங்கள் 5.6k ரெசலியூசன் கொண்ட வீடியோக்களை பதிவு செய்ய இயலும். 360 டிகிரி சுழல்முறை வீடியோக்கள் எடுக்க உதவும் இந்த கேமராவில் 6 ஸ்மார்ட்போன்கள் இருக்கின்றன. அக்டோபர் 24ம் தேதி முதல் இது விற்பனைக்கு வருகிறது. இதன் விலை ரூ. 47,000 ஆகும். இந்த கேமராக்களில் லைட் மோட், டிஸ்பிளே மோட் மற்றும் மீடியா மோட்கள் என மூன்று விதமான கூடுதல் சிறப்பம்சங்களை தனியாக விலைக்கு வைத்துள்ளது.