இந்த தீபாவளிக்கு ஜியோ போன் வாங்குறவங்களுக்கு காத்துட்டு இருக்கு செம்ம ஆஃபர்…

Reliance JioPhone Diwali Offer : மொத்தம் ரூ.1500 வரை வாடிக்கையாளர்கள் பயன்பெறலாம் என்பது தான் சுவாரசியம்.

Reliance JioPhone Diwali Offer Discount Special Sale

Reliance JioPhone Diwali Offer Discount Special Sale : ஜியோபோன் தீபாவளி 2019 ஆஃபர் என்ற பெயரில் ஒன் – டைம் ஆஃபர் ஒன்றை வெளியிட்டுள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். தற்போது 1500 ரூபாய் விலைக்கு விற்பனையாகி வரும் ஜியோபோனை, தசரா மற்றும் தீபாவளி சலுகையாக ரூ. 699க்கு விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.

Reliance JioPhone Diwali Offer Discount Special Sale

எக்ஸ்சேஞ்ச் என எந்த வார்த்தைகளும் இல்லாமல், ரூ.800ஐ அதிரடியாக தள்ளுபடி செய்து அறிவித்துள்ளது ரிலையன்ஸ் நிறுவனம். இந்த ஆஃபர் மூலம் ஜியோ குழுமத்தில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு மேலும் பல சலுகைகளை அறிமுகம் செய்து வைத்துள்ளது ஜியோ நிறுவனம். அதன் இவ்வாடிக்கையாளர்களுக்கு ரூ.700 மதிப்பிலான சலுகைகள் உறுதி செய்யப்பட்டுள்ளாது. முதல் 7 ரீசார்ஜின் போது ரூ.99க்கான கூடுதல் சலுகைகளை ஜியோ அறிவித்துள்ளது.

இந்த ஜியோபோனை வாங்குபவர்களுக்கு ஏற்கனவே ரூ.800 தள்ளுபடி, மேலும் ரீசார்ஜ் வகையில் மேலும் ரூ.700 சிறப்பு ஆஃபர்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஜியோ போனால் மக்களுக்கு எப்படியும் ரூ.1500 சேமிப்புத்தான்.

மேலும் படிக்க : இனி எல்லாம் ஒன்ப்ளஸ் மயமே… இந்திய சந்தையில் வலுவான இடம் பிடித்த ப்ரீயம் ஸ்மார்ட்போன் நிறுவனம்

இது குறித்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி கூறுகையில், வறுமையின் காரணமாக இந்தியாவில் ஒருவரும் இணைய சேவையை பெறுவதில் இருந்து பின் தங்கி இருக்கக் கூடாது என்று இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார். ஜியோ போன் ஒரு புரட்சி என்பதையும் மேற்கோள் காட்டி இந்த ஆஃபருக்கான அறிக்கையை வெளியிட்டார்.

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Reliance jiophone diwali offer discount special sale jiophone at rs

Next Story
இனி எல்லாம் ஒன்ப்ளஸ் மயமே… இந்திய சந்தையில் வலுவான இடம் பிடித்த ப்ரீயம் ஸ்மார்ட்போன் நிறுவனம்Great Indian Smartphone Survey 2019 OnePlus Smartphones era
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com