Harley Davidson LiveWire Electric Bike India Launch : சூப்பர் பைக் என்றால் அனைவருக்கும் ஒரு வகையில் க்ரேஸ் தான். அதனால் தான் என்னவோ, வருடத்தில் ஆயிரம் பைக்குகள் வந்தாலும், டுகாட்டி, ஹார்லே டேவிட்சன், பி.எம்.டபிள்யூ. போன்ற சூப்பர் பைக்குகள் வரவை மக்கள் ஆர்வத்துடன் எதிர் பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். மிக சமீபத்தில் ஹார்லே டேவிட்சனின் முதல் எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் செய்யப்பட்டது.
Charging Port
அமெரிக்கா, கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த வருடத்தின் கடைசில் இந்த பைக்குகள் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்தியாவில் இந்த பைக் வருமா வராதா என்று அனைவரும் குழம்பி போயிருந்தனர். தற்போது நம்முடைய குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது ஹார்லே டேவிட்சன்.
மேலும் படிக்க : மூன்று அசத்தல் நிறங்களில் வெளியாக இருக்கும் ஹார்லே டேவிட்சனின் முதல் எலெக்ட்ரிக் பைக்... சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா?
Harley Davidson LiveWire Electric Bike India Launch
ஹார்லே டேவிட்சனின் அதிகாரப்பூர்வ இந்திய இணையதளத்தில் லைவ்வையர் வெளியாவது குறித்து குறிப்பிட்டிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு இணையத்தில் இந்த புதிய பைக்கினை இணைக்கவும் ஏக குஷியில் உள்ளனர் ஹார்லே டேவிட்சன் வாடிக்கையாளர்கள். இந்திய விலையில் இந்த பைக் ரூ.20 லட்சத்திற்கு விற்பனையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Official announcement in Harley Davidson's Indian website
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவதற்கு நிறைய புதிய சலுகைகளை வழங்கியிருப்பதால், தொடர்ந்து எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் வாகனங்கள் இந்திய சந்தைகளை நோக்கி படையெடுக்க துவங்கிவிட்டன.
மேலும் படிக்க : Electric Bikes : பெண்களுக்காகவே வெளியாகியுள்ள 3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்! விலையும் ரொம்ப குறைச்சல் தான்…