3 அசத்தல் நிறங்களில் வெளியானது ஹார்லே டேவிட்சனின் முதல் எலெக்ட்ரிக் பைக்… விலை ரூ.20.56 லட்சம்!

Harley-Davidson LiveWire : இந்த வருடத்தின் பிற்பாதியில் அமெரிக்கா, கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த பைக்குகள் விற்பனைக்கு வருகின்றன

By: Updated: July 17, 2019, 08:19:18 AM

Harley-Davidson LiveWire electric bike Specifications, Price, Availability, Colors : மிலன் மோட்டர்சைக்கிள் கண்காட்சி (EICMA 2018) 2018 -ன் போது ஹார்லி டேவிட்சன் தன்னுடைய லைவ் வயர் எலக்ட்ரிக் பைக்கினை அறிமுகம் செய்து வைத்தது.

Harley Davidson LiveWire Electric Bike – நிறங்கள்

தற்போது அந்த லைவ் வையர் எலக்ரிக் பைக் விற்பனைக்கு வந்துள்ளது. ஹார்லி-டேவிட்சன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் என்று இந்த கருதப்படும் இந்த பைக் யெல்லோ ஃப்யூஸ் (Yellow Fuse), ஆரஞ்ச், விவிட் ப்ளாக் (Vivid Black) ஆகிய மூன்று நிறங்களில் வெளி வந்துள்ளது.

Harley-Davidson LiveWire electric bike Specifications, Price, Availability, Colors

LiveWire Electric Bike சிறப்பம்சங்கள்

ஓடோ மீட்டர், ஸ்பீட், பேட்டரி பவர், ரைடிங் ரேஞ்ச் போன்ற பாராமீட்டர்களை அறிந்து கொள்ளும் வகையில் 4.3 இன்ச் டி.எஃப்.டி. ஸ்க்ரீன் பொருத்தப்பட்டுள்ளது.  Harley-Davidson Connect interface மூலமாக நம்முடைய ஸ்மார்ட்போனை பைக்குடன் கனெக்ட் செய்து மல்டிமீடியா சேவைகளை பெற்றுக் கொள்ளலாம்.

பாதுகாப்பு அம்சங்கள்

கார்னரிங் ஏ.பி.எஸ், ட்ராக்சன் கண்ட்ரோல், ட்ராக் டார்க்யூ ஸ்லிப் கண்ட்ரோல், மற்றும் இரு பக்கங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகளை பெற்றுள்ளது.

வேகம் – பேட்டரி செயல்திறன்

60 நிமிடங்களில் உங்களால் இந்த பைக்கினை 100% சார்ஜ் செய்து கொள்ளலாம். இதன் வேகம் 0-ல் இருந்து 100 கி.மீ வரை அதிகரிக்க 3 நொடிகள் தான் தேவை. ஒரு முறை சார்ஜ் செய்தால் 235 கி.மீ வரை செல்லும் இந்த பைக், நகர்புறங்களில், அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் 152 கி.மீ வரை பயணிக்கும்.

Harley-Davidson LiveWire electric bike Specifications, Price, Availability, Colors

விலை

இந்த வருடத்தின் பிற்பாதியில் அமெரிக்கா, கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த பைக்குகள் விற்பனைக்கு வருகின்றன. இடதன் விலை 30 ஆயிரம் டாலர்கள். இந்திய ரூபாய் மதிப்பில் 20.56 லட்சம் ரூபாயாகும். இதுவரை இந்த பைக் இந்தியாவிற்கு விற்பனைக்கு வருமா என்பது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

மேலும் படிக்க : இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்.யூ.வி கார் ஹூண்டாய் கோனா ஒரு பார்வை…

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Technology News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Harley davidson livewire electric bike specifications price availability colors

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X