இந்தியாவில் 10ம் ஆண்டு கொண்டாட்டம்.. லிமிட்டட் எடிசன் பைக்கை வெளியிட்டு அசத்தல்

Harley Davidson MY20 Street 750 limited edition : இந்த பைக்கின் ஆரம்ப விலையே 5 லட்சத்தை தாண்டுகிறது.

By: Updated: August 30, 2019, 02:31:39 PM

Harley Davidson MY20 Street 750 limited edition : இந்தியாவில் ஹார்லே டேவிட்சன் பைக்குகள் தங்களின் இயக்கத்தை துவங்கி 10 வருடங்கள் நிறைவுற்றதை தொடர்ந்து, அதனை நினைவு கொள்ளும் விதமாக ஸ்ட்ரீட் 750-ல் லிமிட்டெட் எடிசன் பைக்குகளை நேற்று வெளியிட்டுள்ளது அந்நிறுவனம்.

ஹார்லே டேவிட்சன், உலக புகழ்பெற்ற இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இந்த பைக்குகள் பார்ப்பதற்கு பீஸ்ட் போன்று, தள்ளுவதற்கே சற்று சிரமமான எடையுடன் தான் இருக்கும். சில சமயங்களில் பைக்குகளின் ஆரம்ப விலையை கேட்டாலே தலை சுற்றும். ஆனாலும் பைக் ப்ரியர்களின் இதயமாய் இருக்கிறது இந்த பைக். அதனால் தான் ஹார்லே டேவிட்சன் ரக பைக்குகள் மீது இளைஞர்கள் க்ரேசியாக சுற்றிக் கொண்டு இருக்கின்றார்கள்.

இந்தியாவில் இந்த நிறுவனம் செயல்படத் துவங்கி 10 வருடம் ஆனதை தொடர்ந்து, டேஸி டிசைனில் புதிய ஆனால் லிமிட்டடான எண்ணிக்கையில் ஹார்லே டேவிட்சன் MY20 Street 750 பைக்குகளை வெளியிட்டுள்ளது அந்நிறுவனம். வெறும் 300 பைக்குகள் மட்டும் தான். ஆரம்ப விலையும் ரூ.5.47 லட்சம் ஆகும்.

மேலும் படிக்க : லைவ் வயர் பைக்கின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை

Harley Davidson MY20 Street 750 limited edition – இந்த ஸ்பெசல் எடிசனில் என்ன ஸ்பெசல்?

பார்ப்பதற்கு ஸ்டேன்டர்ட் வகை ஸ்ட்ரீட் 750 போன்றே இருக்கும் இந்த பைக்கை கொஞ்சம் உற்று கவனித்தால் தான் அங்கு இந்திய கலையை குறிக்கும் வண்ணப்பூக்கள் ஃப்யூல் டேங்கில் பொறிக்கப்பட்டிருப்பது தெரியும்.

அதற்கு கீழே இந்தியாவில் 10 வருடங்கள் என்பதை சுட்டிக் காட்டும் வகையில் ‘Harley-Davidson 2009 – 2019 – 10 Years’ என்று குறிக்க்பட்டிருக்கும்.

இதே வகையிலான வடிவமைப்பு பைக்கின் ரியர் பேனலிலும் பொறிக்கப்பட்டிருக்கும்.

இந்த பைக் BS6 தரச்சான்றிதழைப் பெறுகிறது. ஹார்லே டேவிட்சனில் இந்த தரச்சான்றிதழைப் பெறும் முதல் பைக் இதுவாகும். 650cc plus பைக்குகளிலும் இந்த சான்றிதழைப் பெறும் முதல் பைக் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Harley davidson my20 street 750 limited edition specifications offers sales price

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X