Honor 10 lite Smartphone : இந்தியாவில் வெளியானது ஹூவாய் நிறுவனத்தின் இணை தயாரிப்பான ஹானரின் ஹானர் 10 லைட் போன். இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி + 64ஜிபி இண்டர்நெல் ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி ரேம் + 128 ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ்ஜூடன் வெளியாகின்றது.
ஸ்கை ப்ளூ, சேப்பையர் ப்ளூ, மற்றும் மிட்நைட் ப்ளாக் என மூன்று சூப்பர் நிறங்களில் வெளியாகும் இந்த போன்களின் விலை முறையே ரூபாய் 13,999 மற்றும் 17,999 ஆகும்.
ஜனவரி 20ம் தேதி முதல் இந்த போன்கள், ஃபிளிப்கார்ட் இணைய தளத்தில் விற்பனைக்கு வருகின்றது.
இந்த மிட்ரேஜ் ஸ்மார்ட்போன் கிரின் 710 ப்ரோசசருடன் வர இருப்பதால், இதன் செயல் திறன் மிகவும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Honor 10 lite Smartphone - இதர சிறப்பம்சங்கள்
6.21 இன்ச் ஃபுல் டிஸ்பிளே
ரெசலியூசன் 2340×1080 pixels
ஹூவாய் நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான ஹைசிலிக்கான் கிரின் 710 ப்ரோசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது
ARM Mali-G51 MP4 கிராபிக்ஸ் ப்ரோசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது
ஆண்ட்ராய்ட் 9.0 பையை அடிப்படையாக கொண்டு செயல்படும் EMUI 9.0.1 ஸ்கின் இயங்குதளத்தில் இயங்குகிறது.
நான் ரிமுபவள் 3,400mAh சேமிப்புத் திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது.
பின்பக்க கேமராக்கள் 13 எம்.பி மற்றும் 2 எம்.பி செயல் திறன் கொண்டதாகும். 24 எம்.பி. செல்ஃபி கேமராவை கொண்டுள்ளது இந்த போன்.
மேலும் படிக்க : 48 எம்.பி. சோனி கேமரா சென்சார் கொண்ட போனின் விலை இவ்வளவு தானா ?