24 மணிநேரமும் ஹாட்ஸ்டார் தான்… இந்தியாவின் அதிகம் விரும்பப்படும் வீடியோ கண்டெண்ட் ப்ளாட்பார்ம்…

5 மெட்ரோ நகர மக்களில் 65% பேரின் பொழுதுபோக்கே அமேசான் ப்ரைம் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் மட்டும் தான். 

By: Updated: June 21, 2019, 08:14:12 AM

Hotstar Top OTT Player in India : இந்தியாவில் உள்ள 5 பெருநகரங்களில் வசிப்பவர்களின் பொழுது போக்காக மாறியிருக்கிறது ஓ.டி.டி. ப்ளாட்பார்ம்கள். இங்கு வசிக்கும் மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார் போன்ற செயலிகள் தான் தங்களுக்கான எண்டெர்டெய்னர்கள் என்றே கூறுகின்றார்கள்.

 Counterpoint Survey

கவுண்ட்டர் பாயிண்ட் நிறுவனம் நடத்திய சர்வே முடிவில் இந்த ப்ளாட்பார்ம்களில் 16 முதல் 24 வயது உள்ளவர்கள் செலவிடும் அதே நேரத்தினை 25 வயது முதல் 35 வயது உள்ளவர்கள் செலவிடுகிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

மெட்ரோவில் இருப்பவர்களில் 55% பேர் இந்த ப்ளாட்பார்மை பயன்படுத்துகிறார்கள் என்றும் டயர் 1 சிட்டிகளில் 36% பேர் இந்த ப்ளாட்பார்மினை பயன்படுத்துகிறார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  ஒட்டுமொஅத்தமாக இந்தியாவின் சிறந்த பொழுதுபோக்காளராக வலம் வருகிறது ஹாட்ஸ்டார்.

அதனைத் தொடர்ந்து அமேசான் ப்ரைம் வீடியோ, சோனிலைவ், நெட்ஃப்ளிக்ஸ், வூட், ஜீ5, ஏ.எல்.டி பாலாஜி, எரோஸ் நவ் போன்ற செயலிகள் இடம் பெற்றுள்ளன.

ஹாட்ஸ்டார் முழுக்க முழுக்க, இலவச பயனாளிகளின் பங்களிப்பால் நிறைந்ந்து வழிகின்றது.

நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் வீடியோ வேலைக்கு செல்லும், சம்பாதிக்கும் இளைய தலைமுறைகள் மத்தியில் ஹிட் அடித்திருக்கிறது. 5 மெட்ரோக்களில், இதன் பயன்பாடு மிகவும் அதிகமாக இருக்கிறது. இங்கிருக்கும் மக்களில் 65% பேரின் பொழுதுபோக்கே அமேசான் ப்ரைம் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் மட்டும் தான்.

வூட் ப்ளாட் ஃபார்ம் பெண்களின் வருகையால் திக்குமுக்காடிப் போயுள்ளது. 16 முதல் 24 வயது பெண் சந்தாதார்கள் தான் அதிகம்.

ஜியோவின் பயன்பாடு அதிகமான காரணத்தால் வீடியோ கண்டெட்டுகள் பக்கம் இளைஞர்களின் பார்வை திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : தொலைந்து போன உங்களின் ஸ்மார்ட்போனை கண்டுபிடிக்க மத்திய அரசின் ஸ்மார்ட் ஐடியா

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Hotstar top ott player in india amazon prime netflix lead in metros

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X