ஆதார்- பான் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் ஆதார்- பான் எண் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதி கடைசி தேதியாக அறிவித்துள்ளது. இதை செய்ய தவறும்பட்சத்தில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பான் அட்டை செயலற்றதாகி விடும் எனவும் எச்சரித்துள்ளது. தற்போது ரூ.1000 அபராதக் கட்டணத்துடன் ஆதார்- பான் இணைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆதார்- பான் எண் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளதா என்பதை வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
- வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கம் e-filing இணையதளப் பக்கத்திற்கு செல்ல வேண்டும். (https://www.incometax.gov.in/iec/foportal/)
- இதில் இடதுபுறம் உள்ள Quick Links என்ற டேப்பில் “Link Aadhaar Status” என்பதை செலக்ட் செய்யவும்.
- இப்போது உங்கள் பான் மற்றும் ஆதார் எண்ணை பதிவிடவும்.
- அடுத்து ‘View Link Aadhaar Status’ என்பதை கிளிக் செய்யவும்.
இதை கொடுத்த பின் உங்கள் ஆதார்- பான் எண் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதை காண்பித்து விடும். இணைக்கப்பட்டிருந்தால் எதுவும் செய்யத் தேவையில்லை. ஆனால் இணைக்கப்பட வில்லை என்றால் கட்டாயம் இணைக்க வேண்டும்.
இந்த சிம்பிள் ஸ்டெப்ஸ் பின்பற்றி ஆதார்- பான் ஆன்லைனில் எளிதாக இணைக்கலாம்.
ஆதார்- பான் இணைப்பு: அபராதக் கட்டணம் எப்படி செலுத்துவது?.. மார்ச் 31-க்குப் பிறகு என்ன நடக்கும்?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“