scorecardresearch

ஆதார்- பான் இணைத்து விட்டீர்களா? நெருங்கும் கடைசி தேதி.. ஆன்லைனில் எப்படி செக் செய்வது?

வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் ஆதார்- பான் இணைப்பு குறித்து தெரிந்து கொள்ளலாம்.

PAN card of 13 crore people may be cancelled
Aadhaar-PAN linkin

ஆதார்- பான் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் ஆதார்- பான் எண் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதி கடைசி தேதியாக அறிவித்துள்ளது. இதை செய்ய தவறும்பட்சத்தில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பான் அட்டை செயலற்றதாகி விடும் எனவும் எச்சரித்துள்ளது. தற்போது ரூ.1000 அபராதக் கட்டணத்துடன் ஆதார்- பான் இணைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆதார்- பான் எண் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளதா என்பதை வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

  1. வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கம் e-filing இணையதளப் பக்கத்திற்கு செல்ல வேண்டும். (https://www.incometax.gov.in/iec/foportal/)
  2. இதில் இடதுபுறம் உள்ள Quick Links என்ற டேப்பில் “Link Aadhaar Status” என்பதை செலக்ட் செய்யவும்.
  3. இப்போது உங்கள் பான் மற்றும் ஆதார் எண்ணை பதிவிடவும்.
  4. அடுத்து ‘View Link Aadhaar Status’ என்பதை கிளிக் செய்யவும்.
    இதை கொடுத்த பின் உங்கள் ஆதார்- பான் எண் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதை காண்பித்து விடும். இணைக்கப்பட்டிருந்தால் எதுவும் செய்யத் தேவையில்லை. ஆனால் இணைக்கப்பட வில்லை என்றால் கட்டாயம் இணைக்க வேண்டும்.

இந்த சிம்பிள் ஸ்டெப்ஸ் பின்பற்றி ஆதார்- பான் ஆன்லைனில் எளிதாக இணைக்கலாம்.

ஆதார்- பான் இணைப்பு: அபராதக் கட்டணம் எப்படி செலுத்துவது?.. மார்ச் 31-க்குப் பிறகு என்ன நடக்கும்?

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: How to check aadhaar pan linking status online