how to delete your Smartphone data securely : உங்களின் ஸ்மார்ட்போனை விற்பனை செய்வதற்கு முன்பு சில விசயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதில் மிக முக்கியமான ஒன்று உங்கள் போனின் டேட்டாவை டெலிட் செய்வது. என்க்ரிப்ட் செய்யாமல் மற்றவரிடம் கொடுத்துவிட்டால் உங்களின் புகைப்படங்கள் மற்றும் இதர முக்கியமான விசயங்கள் மற்றவர்களின் கைக்கு கிடைத்துவிடும்.
how to delete your Smartphone data securely
முதலில் உங்களின் போனிற்கு ஃபுல் சார்ஜ் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். ஏன் என்றால் டெலிட் ப்ராசஸ் நிறைய நேரம் எடுத்துக் கொள்ளும்.
லாலிப்பாப் மற்றும் அதற்கு அடுத்த வெர்ஷ்ன் இயங்குதளத்தில் இயங்கும் ஸ்மார்ட்போன்கள் வைத்திருந்தால், ஆண்ட்ராய்ட் ஃபேக்ட்ரி ரீசெட் ப்ரோடெட்க்சன் வைத்திருக்கிறீர்களா என்பதை என்பது உறுதி செய்து கொள்ளுங்கள்.
உங்கள் போனின் ஸ்கீரின் லாக்கை ரிமூவ் செய்து கொள்ளுங்கள். செட்டிங்க்ஸில் சென்று செக்யூரிட்டி மற்றும் லோகெஷனில் அமைந்திருக்கும் ஸ்கீரின் லாக்கை தேர்வு செய்து அதில் ”நன்” - ஐ தேர்வு செய்யவும்.
உங்களின் கூகுள் அக்கௌண்ட்டை ரிமூவ் செய்யவும். அதற்கு செட்டிங்ஸ் -> அக்கௌண்ட்ஸ் -> கூகுள் -> அதில் ரிமூவ் அக்கௌண்டை தேர்வு செய்து கொள்ளவும். சாம்சங் கேலக்ஸி பயனாளர்கள் செட்டிங்ஸ்>க்ளௌட் அக்கௌண்ட்ஸ்>கூகுள் - பின்பு அதில் ரிமூவ் அக்கௌண்ட் செட்டிங்க்ஸை தரவும்.
செக்யூரிட்டி ஆப்சனை செட்டிங்க்ஸில் தேர்வு செய்து என்க்ரிப் போன் ஆப்சனை க்ளிக் செய்யவும். பின்பு உங்கள் ஸ்மார்ட்போனின் உள்ள மொத்த டேட்டாவும் அழிய தொடங்கிவிடும். கேலக்ஸி வைத்திருப்பவர்கள் - செட்டிங்க்ஸ்->லாக் ஸ்கிரீன் அண்ட் செக்யூரிட்டி > ப்ரோடெக்ட் என்க்ரிப்டட் டேட்டாவை தேர்வு செய்து கொள்ளலாம்.
என்க்ரிப்டட் டேட்டாவை தேர்வை செய்யும் போது உங்களுக்கு கைட் லைன் காட்டும். அதன் படி யாராலும் கண்டு பிடிக்க இயலாத கடவு சொல்லை பய்னப்டுத்த வேண்உம். எஸ்.டி. கார்ட் டேட்டாவை என்கிரிப்ட் செய்ய வேண்டாம்.
பேக்ட்ரி ரீசெட் ஹார்ட்வேரை தேர்வு செய்து, பேக் அப் மற்றும் ரீசெட் ஆப்சனை தரவும். அதன் பிறகு பேக்டரி டேட்டா ரீசெட் மற்றும் ரீசெட் போன் ஆப்சன்களை பயன்படுத்தி உங்களின் டேட்டாவை அழித்துக் கொள்ளலாம்.
உங்களின் ஸ்மார்ட்போனில் இருந்த மொத்த டேட்டாவும் என்கிரிப் ஆன பின்பு நீங்கள் உங்கள் போனை யாருக்கு தர வேண்டுமோ தாரளமாக தந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க : ஃபேஸ்புக்கிலும் வரும் டார்க் மோட்.. பயன்படுத்துவது எப்படி