How To Save Whatsapp Status: வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்க்க முடியும் சரி... அதை சேமிக்க முடியுமா?

follow these simple steps to download Whatsapp status videos and images: தேவையான ஸ்டேட்டஸை சேமிக்க, தொடர்ந்து பிரஸ் செய்து, Copy செய்து, உங்களுக்கு தேவையான இடத்தில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்

follow these simple steps to download Whatsapp status videos and images: தேவையான ஸ்டேட்டஸை சேமிக்க, தொடர்ந்து பிரஸ் செய்து, Copy செய்து, உங்களுக்கு தேவையான இடத்தில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
whatsapp status, download whatsapp videos

whatsapp status, download whatsapp videos

Simple Steps To Download Whatsapp Status On Android: தினம் ஒரு வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைக்காமல் யாரும் தூங்குவதில்லை, தினம் நம் தொலைபேசியில் இருக்கும் அனைவரது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்க்காமலும் யாரும் தூங்குவதில்லை. ஸ்நாப்சாட் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் கட்டுரைகள் 24 மணி நேரத்தில் அதுவாகவே நீங்கிவிடும். அதுபோல, வாட்ஸ் அப்-ல் வைக்கும் ஸ்டேட்டஸும் 24 மணி நேரத்தில் அதுவாகவே நீங்கிவிடும். வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் உருவாக்குவது எளிது. ஆனால், அதை சேமித்து வைப்பது எப்படி என்று தெரியுமா?

Advertisment

மேலும் படிக்க - Whatsapp New Feature: வாட்ஸ் அப்-ல் வெளிவரும் புதிய வசதி! இனி தேவையில்லாத பல கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்!

ஆண்ட்ராய்டு போன்களில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை சேமித்து வைப்பது எப்படி?

உங்கள் ஆண்ட்ராய்டு போன்களில் உள்ள கூகுள் ஃபைல்ஸ் ஆப்-ஐ ஓப்பன் செய்து, மேலே இடது பக்கம் அமைந்திருக்கும் hamburger ஐகானை க்ளிக் செய்து, செட்டிங்ஸ் செல்லவும். அதேபோல், பிக்ஸல் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறீர் எனில், ஃபைல்ஸ் ஆப் ஓப்பன் செய்து, மேலே வலது பக்கத்தில் இருக்கும் மூன்று புள்ளிகள் கொண்ட சின்னத்தை க்ளிக் செய்து, செட்டிங்ஸ் செல்லவும். அடுத்த திரையில், show hidden files என்பதை எனேபிள் செய்யவும். பிக்ஸல் ஸ்மார்ட் போன்களில் 'Show internal storage' என்பதை எனேபிள் செய்ய வேண்டும்.

Advertisment
Advertisements

இப்போது மீண்டும் ஃபைல்ஸ் ஆப் மெயின் மெனு சென்று, இன்டெர்னல் ஸ்டோரேஜ் பக்கம் செல்ல வேண்டும்.

Internal Storage > WhatsApp Folder ? Media > 'Statuses' என்று இருப்பதை நீங்கள் கண்டறியலாம். தேவையான ஸ்டேட்டஸை சேமிக்க, தொடர்ந்து பிரஸ் செய்து, Copy செய்து, உங்களுக்கு தேவையான இடத்தில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: