HTC Wildfire X smartphone specifications, price, launch, and availability : கடந்த ஆண்டு தன் செயல்பாட்டை இந்தியாவில் நிறுத்திக் கொண்ட எச்.டி.சி. நிறுவனம், மீண்டும் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. வைல்ட் ஃபையர் எக்ஸ் (Wildfire X) என்று அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனின் அளவு 6.22 இன்ச் ஆகும். எச்.டி. திரையுடன் வெளியாகும் இந்த ஃபோன் மூன்று பின்பக்க கேமராக்களை கொண்டுள்ளது.
இன்று வெளியான இந்த ஸ்மார்ட்போனை ஆகஸ்ட் 22ம் தேதி முதல் ஃப்ளிப்கார்ட்டில் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். விலை 3GB RAM / 32GB - சேமிப்புத்திறன் கொண்ட ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999 ஆகும். 4ஜிபி/128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போனின் விலை ரூ. 12,999 ஆகும்.
பட்ஜெட் வாடிக்கையாளர்களை இலக்காக கொண்டு வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன் ரெட்மீ 3 மற்றும் சியோமியின் ரெட்மீ நோட் 7எஸ் போன்களுக்கு போட்டியாக வர உள்ளது. ஆக்டா கோர் ப்ரோசசருடன் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி அல்லது 6ஜிபி ரேம் மற்றும் 64/128ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ்ஜூடன் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளது அந்நிறுவனம்.
ஆண்ட்ராய்ட் 9.0 பை இயங்கு தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும். இதன் பேட்டரி சேமிப்புத்திறன் 3300mAh 2ஆகும்.
கேமரா
மூன்று பின்பக்க கேமராக்களை இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது. 12 எம்.பி. ப்ரைமரி கேமரா, 5 எம்.பி. டெப்த் சென்சார் மற்றும் 8 எம்.பி. ஸூம் கேமரா பின்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 8 எம்.பி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : ஸ்பெய்னை தொடர்ந்து இந்தியாவுக்கும் நல்வரவை தரும் Mi A3… 21ம் தேதி வெளியீடு
எச்.டி.சி என்ற பெயர் வேண்டுமானால் நமக்கு மகிழ்வைத் தரலாம். ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால், சீனாவை சேர்ந்த இன்-ஒன் டெக்னாலஜி எனப்படும் நிறுவனம், இந்தியாவில் எச்.டி.சிக்கான லைசென்ஸை பெற்றுள்ளது. ஒரு காலத்தில் ஆப்பிளுடனும், சாம்சங் நிறுவனத்துடனும் போட்டியிட்ட நிறுவனம் எச்.டி.சி என்பது தான் தற்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் வேதனையை தருகிறது.