Advertisment

21ம் தேதி வெளியாகிறது சியோமியின் Mi A3... கேமரா ஃபீச்சர் தான் ஹைலைட்

Xiaomi MI A3 Price : ஸ்பெய்னில் வெளியிடப்பட்ட போது அறிவிக்கப்பட்ட விலை தான் இந்தியாவிலும் இருக்கும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Xiaomi Mi A3 smartphone specifications

Xiaomi Mi A3 smartphone specifications

Xiaomi Mi A3 smartphone specifications :  சியோமியின் Mi A3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வருகின்ற 21ம் தேதி வெளியாக இருப்பதை அந்நிறுவனத்தின் இந்திய தாலிவர் மனு குமார் ஜெய்ன் உறுதி செய்துள்ளார். ஆண்ட்ராய்ட் ஒன் ஓ.எஸ்.-ல் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் மூன்று பின்பக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் ஸ்பெயினில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்தியாவில் ஆகஸ்ட் 21ம் தேதி பகல் 12 மணிக்கு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளது. இதற்கு முன்பு இந்த சீரியஸில் வெளியான இதர போன்களைப் போலவே இந்த ஸ்மார்ட்போனும் 2 வருட சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் 3 வருட செக்யூரிட்டி அப்டேட்டுகளுடன் வெளியாகிறது.

Xiaomi Mi A3 smartphone specifications

6.1 இன்ச் எச்.டி + ஏ.எம்.ஓ.எல்.இ.டி திரை கொண்டுள்ளது

இதன் ரெசலியூசன் - 1560 x 720 பிக்சல்கள் ஆகும்.

அஸ்பெக்ட் ரேசியோ 19.5:9

கார்னிங் கொரில்லா க்ளாஸ் 5 கோட்டிங் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்நாப்ட்ராகன் 665 ப்ரோசசர் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் டிஸ்பிளேயின் அடியில் பொருத்தப்பட்டுள்ளாது.

இதில் மூன்று பின்பக்க கேமராக்கள் உள்ளன. முதன்மை கேமரா 48 எம்.பி. ஆகும். அல்ட்ரா வைட் கேமரா 8 எம்.பி. செயல்திறன் கொண்டவை. மூன்றாவது டெப்த் சென்சார் 2 எம்.பி. செயல்திறன் கொண்டவை. செல்ஃபி கேமரா 32 எம்.பி. ஆகும்.

மேலும் படிக்க :  கேலக்ஸி ஏ10 எஸ் :  மீண்டும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் மீது கவனம் செலுத்தும் சாம்சங் நிறுவனம்

பேட்டரி : 4030mAh செயல் திறன் கொண்டவை

18W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தில் விரைவாக போனை சார்ஜ் செய்து கொள்ளலாம்.

Xiaomi Mi A3 Price

இந்த ஸ்மார்ட்போனின் (4GB+64GB மாடல்) ஆரம்ப விலை 249 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ. 19,000).  4GB+128GB ஸ்மார்ட்போனின் விலை 279 யூரோ (இந்திய விலையில் ரூ. 21,500 ஆகும்) . இதே விலையை இந்தியாவிலும் எதிர்பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன்கள் நீலம், வெள்ளை மற்றும் க்ரே ஆகிய மூன்று நிறங்களில் வெளியாக உள்ளன.

மேலும் படிக்க : லெய்க்கா கேமராக்களுடன் மிரட்ட வரும் ஹூவாய் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்கள்

 

Xiaomi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment