Advertisment

ஹுவாய் நோவா 3 மற்றும் 3i ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இன்று அறிமுகம்

இந்தியாவில் இந்த திறன்பேசிகள் எங்கே கிடைக்கும் என்ற அறிவிப்பும் இன்று வெளியிடப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Huawei Nova

Huawei Nova 3 series Phones

ஹுவாய் நோவா 3 (Huawei Nova 3) மற்றும் ஹுவாய் நோவா 3i (Huawei Nova 3i) என இரண்டு ஸ்மார்ட்போன்களும் இம்மாதம் சீனாவில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தியாவிலும் இந்த போன்கள் இன்று அறிமுகம் செய்து வைக்கப்படுகிறது.

Advertisment

Huawei Nova திறன்பேசிகளின் சிறப்பம்சங்கள்:

இந்த இரண்டு திறன்பேசிகளும் நோட்ச் டிஸ்பிளேவுடன் டூயல் ரியர் கேமராக்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இரண்டு திறன்பேசிகளின் திரையும் ஃபுல் எச்.டியுடன் கூடிய 19.5:9 ஸ்கிரீன் ஃபார்மட்டில் வெளிவருகிறது.

இயங்கு தளம்: ஆண்ட்ராய்ட் ஓரியோ

திரையின் அளவு: 6.3 அங்குலம்

புரோசஸ்ஸர்:

ஆக்டா கோர் ஹைசிலிக்கான் க்ரின் 970 எஸ்ஓசி (ஹுவாய் நோவா 3 )

ஆக்டா கோர் ஹைசிலிக்கான் க்ரின் 710 எஸ்ஓசி (ஹுவாய் நோவா 3i )

மெமரி:

ஹுவாய் நோவா 3  - 6GB RAM/ 128GB

ஹுவாய் நோவா 3i  - 4GB RAM/ 128GB

விலை:

இந்த ஹுவாய் நோவா (Huawei Nova), மிட்ரேஞ்ச் திறன்பேசிகளாகும். ஹுவாய் நோவா 3 மற்றும் ஹுவாய் நோவா 3i விலை முறையே ரூ. 30,500 மற்றும் ரூ. 20,300 ஆகும்.

கேமராக்கள்:

இரண்டு திறன்பேசிகளிலும் வேர்டிகள் டூயல் ரியர் கேமராக்கள் பொறுத்தப்பட்டிருக்கிறது. நோவா 3யில் பின்பக்கம் 16 மெகாபிக்சல் மற்றும் 24 மெகாபிக்சல் திறன் கொண்ட இரட்டை கேமாராக்கள் பொறுத்தப்பட்டிருக்கிறது. முன்பக்கமும் இரட்டைக் கேமராக்களை கொண்டுள்ளது. அதன் திறன்கள் முறையே 24 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல்கள் ஆகும்.

நோவா 3i திறன்பேசியும் நோவா 3ஐப் போல் அதே திறன் கொண்ட முன் மற்றும் பின்பக்க இரட்டைக் கேமராக்களை கொண்டிருக்கிறது.

These smartphones are hit the market in Q2 of 2018

இந்த திறன்பேசிகளின் அறிமுக நிகழ்ச்சியில் தான், இந்த போன்கள் இந்தியாவில் எங்கு கிடைக்கும் என்றும் அறிவிக்கப்படும் என்று அதன் நிர்வாகம் கூறியிருக்கிறது.

Huawei
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment