சியோமியை பின்னால் தள்ளி முதலிடம் பிடித்த சாம்சங்

இந்தியாவில் 2018ன் இரண்டாம் காலாண்டில் அதிக அளவு விற்பனையான ஸ்மார்ட்போன்கள்

By: Updated: July 25, 2018, 01:57:38 PM

இந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டில் அதிக அளவு விற்பனையான போன்களின் பட்டியலை அறிவித்திருக்கிறது கவுண்ட்டர் பாயின்ட் நிறுவனம். அதில் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் (Samsung Smartphones) அதிக அளவு விற்பனையாகி முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் தயாரிப்புகளான கேலக்ஸி ஜே6, கேலக்ஸி ஜே2, கேலக்ஸி ஜே4 ஆகிய ஸ்மார்ட்போன்கள் அதிக அளவில் விற்பனையாகியுள்ளன.

கவுண்ட்டர் பாய்ண்ட் வெளியிட்ட, இதற்கு முந்தைய காலாண்டிற்க்கான டாப் 5 போன்களின் பட்டியல்

இந்தியாவின் ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் தற்போது 29% இடம் பிடித்துள்ளது சாம்சங். சாம்சங்கினைத் தொடர்ந்து சீனாவின் தயாரிப்பான சியோமி 28% மார்க்கெட்டினை கையில் வைத்து இரண்டாம் இடத்தினைப் பிடித்துக்கிறது.

Samsung India beat Xiaomi as top smartphone spot in India in Q2 2018

ரெட்மி 5A, ரெட்மி நோட் 5 ப்ரோ, ரெட்மி நோட் 5 போன்களின் விற்பனை மிக அதிக அளவு இருந்ததினால் கடந்த இரண்டு காலாண்டுகளாக சியோமி தான் முதலிடத்தை தக்க வைத்திருந்தது.

Samsung Smartphones Samsung Smartphones on Top list

இந்த பட்டியலில் அடுத்தடுத்து விவோ, ஓப்போ, மற்றும் ஹானர் அலைபேசிகள் இடம் பெற்றுள்ளன. முதலாம் காலாண்டில் இடம் 26.2% மார்க்கெட் பங்குகளை மட்டும் கொண்டிருந்த சாம்சங் 10000 ரூபாய்க்கான பட்ஜெட் போன்களை அதிகம் வெளியிட்டு தனக்கான இடத்தினை பிடித்துக் கொண்டது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Technology News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Samsung smartphones beat xiaomi as top the smartphone vendor in india in q2 2018 counterpoint

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X