Advertisment

அல்ட்ரா வைட் கேமராவுடன் களம் இறங்கிய ஹூவாய் மேட் 20 ப்ரோ

மூன்று ரியர் கேமராக்களுடன் அசத்தலாக வெளிவந்த மேட் சீரியஸ் போன்கள்...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Huawei Mate 20 Pro Camera Specifications, Huawei Mate 20 Pro price in India

Huawei Mate 20 Pro Camera Specifications

ஆப்பிளுக்கும் சாம்சங்கிற்கும் போட்டியாய் களமிறங்கிய ஹூவாய் மேட் சீரியஸ் போன்கள்.  ஹூவாய் மேட் 20 (Huawei Mate 20) , ஹூவாய் மேட் 20 ப்ரோ (Huawei Mate 20 Pro), ஹூவாய் மேட் 20 RS (Huawei Mate 20 RS), ஹூவாய் மேட் 20 X (Huawei Mate 20 X) என நான்கு போன்களை நேற்று லண்டனில் ஹூவாய் நிறுவனம் தன்னுடைய மேட் சீரியஸ்ஸில் வெளியிட்டது.

Advertisment

கேட்ஜெட் குருக்களின் கண்களைக் கவர்ந்தது என்னவோ Huawei Mate 20 Pro போனும் Huawei Mate 20 போனும் தான். நான்கு போன்களும் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் தங்களின் முகநூல் மற்றும் வாட்ஸ்ஆப்களில் இந்த போனின் கேமரா மற்றும் முக்கியமான சிறப்பம்சங்களை ஸ்டேட்டஸ்களாக வைக்க ஆரம்பித்துவிட்டனர். மேலும் படிக்க : ஹானர் 8X போன் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை

Huawei Mate 20 Pro சிறப்பம்சங்கள் ஒரு பார்வை

ஐபோன் மற்றும் கேலக்ஸி நோட் 9ற்கு போட்டியாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்த ஹையர் எண்ட் ப்ரீமியம் ஹூவாய் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட் போன்.

சிறப்பம்சங்கள் - திரை

6.39 அங்குல அளவுள்ள இந்த போனின் திரை OLEDயால் உருவாக்கப்பட்டிருக்கிறது. டிஸ்பிளே ஃபார்மட் 19.5:9 ஆகும். இதன் ரெசலியூசன் 2K+ டிஸ்பிளேயுடன் கூடிய 3120×1440 பிக்சல்களைக் கொண்டிருக்கிறது.

கேமரா

இதில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு சிறப்பம்சம் இதன் கேமராக்கள் ஆகும். ஆம். மூன்று ரியர் கேமராக்களுடன் வெளியாகிருக்கிறது இந்த போன்.  லெய்க்கா நிறுவனத்தின் கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டிருக்கிறது. வேறெந்த போன்களிலும் இல்லாத அளவு ஒரு அல்ட்ரா வைட் கேமரா ( 20MP, 16mm, f/2.2 ), வைட் ஆங்கிள் கேமரா (40MP, 27mm, f/1.8 ), மற்றும் டெலிபோட்டோ கேமரா ( 8MP, 3x Telephoto 80mm, f/2.4, OIS) கொண்டிருக்கிறது. செல்பி கேமரா 24 எம்.பி ( f/2.0 ) திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

publive-image

இதர சிறப்பம்சங்கள்

  • ஃபிங்கர் ப்ரிண்ட் சென்சார் இந்த டிஸ்பிளேவுடன் இணைக்கப்பட்டே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
  • 4200mAh பேட்டரி திறன் கொண்டிருக்கிறது. மேலும் ஹூவாயின் 40W சூப்பர்சார்ஜ் சார்ஜர் இதனுடன் வருகிறது.
  • தண்ணீர் மற்றும் தூசிகளில் இருந்து பாதுகாப்பு தரும் IP68 தரச்சான்றிதழைப் பெற்றிருக்கிறது.
  • இன்ஃபிரா ரெட் 3D முக அடையாள தொழில் நுட்பம் ( infrared 3D facial recognition system ) இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
  • ஆண்ட்ராய்ட் 9.0 Pie இயங்கு தளத்தை அடிப்படையாக வைத்து கட்டமைக்கப்பட்ட ஹூவாயின் EMUI 9 இயங்குதளத்தில் இயங்குகிறது இந்த போன்.
  • கிரின் 980 ப்ரோசசர் இந்த போனை இயக்க, 6GB RAM/128GB என்ற சேமிப்புத் திறனுடன் வெளியாகியுள்ளது.
  • வையர்லெஸ் சார்ஜிங் மற்றும் நானோ எஸ்.டி கார்ட் இந்த போனின் மிக முக்கியமான சிறப்பம்சங்களாகும்.

Huawei Mate 20 Pro wireless charger, Huawei Mate 20 Pro specifications, Huawei Mate 20 Pro Price, Huawei Mate 20 Pro review, Huawei Mate 20 Pro launch in India Huawei Mate 20 Pro wireless charger

நிறங்கள்

எமரல்ட் க்ரீன், மிட்நைட் ப்ளூ, ட்விலைட், பிங்க் கோல்ட், மற்றும் கறுப்பு நிறங்களி ல் வெளியாக இருக்கிறது இந்த போன்.

Huawei Mate 20 Pro Specifications Huawei Mate 20 Pro in Twilight color

விலை மற்றும் விற்பனை

இந்த போனின் விலை சுமார் 1049 யூரோவாகும். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 89,310 ஆகும். இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் நேற்றிலிருந்தே விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கிறது இந்த ஹுவாய் மேட்20 ப்ரோ. அமேசான் இணைய விற்பனை தளத்தில் ப்ரீபுக்கிங் மூலமாக இந்தியர்கள் இந்த போனை வாங்கலாம்.

Technology
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment