Huawei Mate X India Launch : பிப்ரவரி மாதம் 24ம் தேதி, ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் வெளியானது ஹூவாய் நிறுவனத்தின் மடக்கு போனான மேட் எக்ஸ். மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் மாநாட்டில் வெளியான அனைத்து போன்களையும் விட அதிகம் ஹைலைட் செய்யப்பட்டது இந்த போன் தான்.
அந்நிறுவனத்தின் ப்ரோடக்ட் மார்க்கெட்டிங் ஹெட்டாக செயல்பட்டு வரும் வாலி யாங் இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், இந்த வருடத்தின் இறுதிக்குள் இந்த போன் இந்தியாவில் வெளியாகலாம் என்று குறிப்பிட்டார். ஆனால் அதன் விலை எவ்வளவாக இருக்கும் என்பதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
Huawei Mate X சிறப்பம்சங்கள்
எது எப்படியானாலும் சரி ப்ரீமியம் வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவே இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
க்ரின் 980 மற்றும் பாலாங் 5000 சிப்செட் இந்த போனில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
5ஜி சப்போர்ட் இருப்பதால் நிச்சயம் 1ஜிபி படத்தினைக் கூட வெறும் 3 நொடிகளில் டவுன்லோடு செய்துவிடலாம் என்கிறார்கள் இதன் தயாரிப்பாளர்கள்.
ஐரோப்பாவில் இந்த வருடத்தின் மத்தியில் வெளியாக உள்ளது இந்த போன். இதன் விலை 2,299 யூரோக்களாகும்.
ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் போனை விட இந்த போனின் விலை மிகவும் அதிகம்.
மேலும் படிக்க : ஹூவாய் மேட் X Vs சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் – எது சிறந்த மடக்கு போன்?