Huawei MateBook 13 launched at CES 2019 : உலகின் மிகப் பெரிய எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் கண்காட்சியான கன்ஸ்யூமர்ஸ் எலெக்ட்ரானிக்ஸ் ஷோ அமெரிக்காவின் லாஸ் வேகஸ்ஸில் நடைபெற்று வருகிறது.
உலகின் தலை சிறந்த எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் புதிய எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வருடம் தோறும் இந்த கண்காட்சியில் வெளியிடுவது வழக்கம்.
இன்று ஹூவாய் நிறுவனத்தின் மேட்புக் 13 வெளியாகியுள்ளது. மேலும் மீடியாபேட் எம் 5 லைட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேட்புக் 13 என்பது, எளிமையாக, எங்கும் எடுத்துச் செல்ல வசதியாக இருக்கும் அல்ட்ராபோர்டபிள் நோட்புக்காகுன்.
மீடியாபேட் எம்5 லைட் என்பது 10 இன்ச் அளவுள்ள டேப்லெட்டாகும். இந்த இரண்டு டிவைஸ்களும் இம்மாத இறுதிக்குள் அமெரிக்க சந்தைகளில் விற்பனைக்கு வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Huawei MateBook 13 launched at CES 2019 – மேட்புக் சிறப்பம்சங்கள்
ஹூவாய் நிறுவனத்தின் இந்த மேட்புக் 13 முழுக்க முழுக்க ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக்கிற்கு போட்டியாக களம் இறக்கப்பட்டிருக்கும் அல்ட்ரா போர்ட்டபில் நோட்புக்காகும்.
மேக்புக் ஏரைவிட 6% சிறிய டிவைஸ் இதுவாகும். 88% ஸ்கிரீன் டூ பாடி ரேசியோவைக் கொண்டுள்ளது இந்த மேட்புக். மேலும் 2,160×1080 ரெசலியூசனையும் கொண்டுள்ளது இந்த போன்.
இண்டெல்கோர் ஐ7 8வது ஜெனரேசன் ப்ரோசசர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
256ஜிபி எஸ்.எஸ்.டி. டிரைவை பயன்படுத்தி டேட்டாவை ஸ்டோர் செய்து கொள்ளலாம்.
Nvidia GeForce MX150 கிராஃபிக்ஸ் கார்ட் பொருத்தப்பட்டுள்ளது.
இதில் வரும் இரண்டு வேரியண்டுகளும் 8ஜிபி ரேமை கொண்டுள்ளது.
ஃபிங்கர் பிரிண்ட் எம்பெடட் பவர் பட்டன், 1 எம்.பி வெப் கேமரா, டைப் சி யூ.எஸ்.பி. போர்ட்கள் 2, மற்றும் 3.5 எம்.எம். ஹெட்போன் ஜேக் ஆகியவை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்த டிவைஸ்.
9 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரம் வரை தாக்குப் பிடிக்கும் வகையில் இதன் பேட்டரி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
விலை 999 அமெரிக்க டாலர்கள் (ரூபாய் 70,035-ல் இருந்து ஆரம்பம்).