Huawei P30 Pro specifications : டெல்லியில் வெளியானது ஹூவாய் நிறுவனத்தின் பி30 ப்ரோ ஸ்மார்ட்போன். டி.எஸ்.எல்.ஆர் கேமராக்களுக்கு சவால்விடும் வகையில் இதனை உருவாக்கி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது அந்த நிறுவனம்.
அமேசான் நிறுவனத்தின் இணைய சேவையில் ஏப்ரல் 15ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. ஜெர்மனியின் ஆப்டிக்ஸ் நிறுவனமான லைக்காவின் நான்கு கேமராக்களை பின்பக்க கேமராக்களாக கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
Huawei P30 Pro specifications (கேமரா)
40 எம்.பி. சூப்பர் ஸ்பெட்க்ரம் லென்ஸ் கொண்ட கேமரா (f1/.16 கொண்டுள்ளது)
20 எம்.பி அல்ட்ரா வைட் லென்ஸ் (f2.2 கொண்டுள்ளது)
8 எம்.பி. பெரிஸ்கோப் மற்றும் டைம் ஆஃப் ப்ளைட் லென்ஸ் என நான்கு மேமராக்களையும் கொண்டுள்ளது இந்த போன்.
மேட் 20 ப்ரோவில் வரும் 3டி டெப்த் சென்சார் இல்லாத 32 எம்.பி. செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது இந்த போன்.
லோ-லைட் போட்டோகிராஃபிக்காகவே உருவாக்கப்பட்ட இந்த போனின் ஐ.எஸ்.ஓ 409,600 புள்ளிகளாகும்.
Huawei P30 Pro specifications
6.47 இன்ச் ஃபுல் எச்.டி + ஓ.எல்.ஈ.டி திரையை கொண்டுள்ளது இந்த போன்.
இன் - டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரையும் கொண்டுள்ளது
மேட் 20 ப்ரோ மற்றும் ஹானர் வியூ20 ஸ்மார்ட்போன்களின் பயன்படுத்தப்பட்ட அதே கிரின் 980 என்ற அதிக திறன் கொண்ட ப்ரோசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது
8ஜிபி மற்றும் 256 ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போனாக இது உள்ளது
ஆண்ட்ராய்ட் 9.0 பை இயங்கு தளத்தில் வெளியாக உள்ளது இந்த போன்
இந்த போனின் விலை ரூ.71,990 ஆகும்
இந்த போன் மட்டுமல்லாமல் இதன் லைட் வெர்ஷனான பி30 லைட் என்ற போனையும் வெளியிட்டு அசத்தியுள்ளது இந்நிறுவனம். அந்த போன்களின் விலை முறையே 4GB/128GB - Rs 19,990 மற்றும் 6GB/128GB - Rs 22,990.
மேலும் படிக்க : புதிதாக வெளியாகும் ரெட்மி நோட் 7 ப்ரோவின் 128ஜிபி வேரியண்ட்! விலை என்ன தெரியுமா ?