Advertisment

புதிதாக வெளியாகும் ரெட்மி நோட் 7 ப்ரோவின் 128ஜிபி வேரியண்ட்! விலை என்ன தெரியுமா ?

ஆண்ராய்ட் பை 9 இயங்கு தளத்தில் செயல்பட்டு வரும் இந்த போனில் 4000 mAh செயல் திறன் கொண்டுள்ள பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Xiaomi Redmi Note 7 Pro 128GB Storage variant

Xiaomi Redmi Note 7 Pro 128GB Storage variant

Xiaomi Redmi Note 7 Pro 128GB Storage variant : சியோமி நிறுவனத்தின் ரெட்மி 2ஓட் 7 ப்ரோ நாளை முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ள இந்த போன் நாளை காலை 10 மணிக்கு ஃபிள்ப்கார்ட்டிலும், 12 மணிக்கு mi.com-லும் வெளியாகிறது.

Advertisment

மார்ச் மாதம் முதல் வாடிக்கையாளர்களின் விருப்பமான போனாகவே மாறிவிட்டது சியோயின் ரெட்மி நோட் 7 ப்ரோ. ஆனாலும் மார்ச் மாதம் வெளியான போனின் சிறப்பம்சங்கள் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இண்டர்நெல் ஸ்டோரேஜ்ஜை மட்டுமே கொண்டிருந்தது. தற்போது அதே மாடலில் மற்றொரு ஸ்டோரேஜ் வேரியண்ட்டுடன் நாளை வெளியாகிறது இந்த போன்.

நாளை ஆன்லைனில் வெளியாகும் இந்த போன்கள் சியோமியின் ஷோ ரூம்களுக்கு ஏப்ரல் மாதம் 17ம் தேதி விற்பனைக்கு வருகிறது.

4ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலை ரூ.13,999 ஆகும். நாளை வெளியாக இருக்கும் போனின் விலை ரூ.16,999 வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சியோமியில் 128ஜிபி ஸ்டோரேஜ்ஜூடன் வெளியாகும் முதல் போனும் இது தான்.

Xiaomi Redmi Note 7 Pro 128GB Storage variant சிறப்பம்சங்கள்

48 எம்.பி. கேமராவை கொண்டுள்ளது இந்த போன். அதன் சென்சார் சோனி நிறுவனத்தின் IMX586 ஆகும்.

குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 675 ஆக்டா கோர் ப்ரோசசரை கொண்டுள்ளது இந்த போன்

6.3 இன்ச்+ஃபுல் எச்.டி. திரை

மைக்ரோ எஸ்டி கார்ட் பொருத்தும் வசதி இல்லை

இரட்டை சிம்கார்டுகள் பயன்படுத்தும் வசதியை கொண்டுள்ளது இந்த போன்

செல்ஃபி கேம்ரா 13 எம்.பி. செயல்திறனைக் கொண்டுள்ளது

ஆண்ராய்ட் பை 9 இயங்கு தளத்தில் செயல்பட்டு வரும் இந்த போனில் 4000 mAh செயல் திறன் கொண்டுள்ள பேட்டரி பொருத்தப்ப்பட்டுள்ளாது

ஸ்ப்ளாஷ் ரெசிஸ்டண்ட்ஸ் கோட்டிங் கொடுக்கப்பட்டுருந்தாலும், முழுமையான வாட்டர் ரெஸிஸ்டன்ஸ் டிவைஸ் இது இல்லை.

மேலும் படிக்க : இத்தனை சிறப்பம்சங்களுடன் வெளியாகிறதா சாம்சங்கின் கேலக்ஸி ஏ90?

Xiaomi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment