/tamil-ie/media/media_files/uploads/2019/12/Huawei-P40-Pro-ITHome-759.jpg)
Huawei P40 Pro to feature 64MP penta camera setup
Huawei P40 Pro to feature 64MP penta camera setup : வருகின்ற மார்ச் மாதத்தில் ஹூவாய் நிறுவனத்தின் பி40 மற்றும் பி40 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் வெளியாக உள்ளது.இதில் பி40 ப்ரோ ஐந்து கேமராக்களை கொண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சதுர கேமரா மோட்யூலில் 5 கேமராக்கள் பொருத்தப்பட்டு வெளியாகும் என்று ஐ.டி.ஹோம் ரிபோர்ட் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க : மெசெஞ்சரை பயன்படுத்த இனி ஃபேஸ்புக் அக்கௌன்ட் கட்டாயம் !
இந்த ஐந்து கேமராக்களில் 64 எம்.பி. சோனி IMX686 கேமராவும், 20 எம்.பி. அல்ட்ரா வைட் சென்சார் கேமராவும், 12 எம்.பி. பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவும், மேக்ரோ மற்றும் 3டி டி.ஒ.எஃப் சென்சாரும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. நாட்ச் டிஸ்பிளேவுடன் இதன் டிஸ்பிளே வெளியாகலாம் என்று எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்ற நிலையில் முன்பக்க கேமரா குறித்த எந்த விதமான அப்டேட்டும் கிடைக்கவில்லை.
மிங் சி கௌ அறிவிப்பின்படி இந்த ஸ்மார்ட்போன்களின் விலை 4000 யுவான் முதல் 5000 யுவான் வரையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (ரூ.40,500 முதல் ரூ.50,700 வரை) மேலும் கிரின் 990 5ஜி ப்ரோசசர் இதில் பயன்படுத்தப்படலாம் என்றும் செய்திகள் கிடைத்துள்ளது.
மேலும் படிக்க : 7 ஸ்டாம்புகளை கலெக்ட் செய்தால் ரூ.2020… யார் யாரெல்லாம் விளையாட ரெடி?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.