Hyundai Kona Chennai Launch : சென்னையில் அறிமுகமானது இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் கார்… முதல்வர் கொடியசைத்து துவக்கம்!
Hyundai Kona Specs, Price, Features Revealed In India : இந்தியாவில் உள்ள 11 மெட்ரோக்கள் மற்றும் பெருநகரங்களில் உள்ள 15 டீலர்கள் மூலமாக விற்பனைக்கு வருகிறது இந்த கார்.
Hyundai Kona Electric Chennai Launch event, Hyundai Kona Electric Chennai Launch event, Hyundai’s Kona SUV electric car launches, Chennai launch of Kona car, edappadi palanisamy, Hyundai Kona Electric SUV Launch
Hyundai Kona Electric Chennai Launch event : ஜூலை 9ம் தேதி அறிமுகமானது ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா எலெக்ட்ரிக் கார். இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையைப் பெறும் இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 452 கி.மீ தூரம் வரை பயணம் செய்யும். ஹவாய் தீவுகளில் அமைந்திருக்கும் கோனா பகுதியை நினைவுகூறும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த கார், அழகான வடிவமைப்பில் அனைவரையும் கவருகிறது.
Hyundai Kona Electric Chennai Launch event : முதல் காரை கொடியசைத்து துவக்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டின் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற ஹூண்டாய் நிறுவனம், தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து ரூ. 2000 கோடி முதலீட்டில் சென்னையில் மின்சார கார்களை தயாரிக்கும் பணிகளை ஹூண்டாய் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. அந்த ஒப்பந்தத்தின் படி கோனா மின்சார கார் இன்று சென்னையில் அறிமுகமாகியுள்ளது. முதல் காரை எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த காரின் விலை ரூ. 25.30 லட்சம் ஆகும்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (24.7.2019) ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா எலக்ட்ரிக் காரை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார். #TNGovt#Hyundai#konaelectricpic.twitter.com/Z2jo8TOfMs
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) 24 July 2019
கோனா காரின் சிறப்பம்சங்கள்
சூப்பர் வேகத்திறன் கொண்ட சார்ஜிங் முறையில் கோனா எஸ்யூவி-க்கு 57 நிமிடங்களில் 80% வரையில் சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதன் ஆன் – போர்ட் சார்ஜரின் செயல்திறன் 7.2 kW ஆகும்.
CCS Type II சார்ஜரில் சார்ஜ் செய்தால் முழு பேட்டரியையும் சார்ஜ் செய்ய 6 மணி நேரம் 10 நிமிடங்கள் ஆகும்.
எக்கோ +, எக்கோ, கம்ஃபோர்ட், மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகிய நான்கு மோட்களில் இந்த வண்டியை இயக்க இயலும்.
64 kWh லித்தியன் ஐயான் பேட்டரி கொண்ட கோனா எலெக்ட்ரிக் காரின் பீக் திறன் 201.2 bhp ஆகவும் 395Nm ஆகவும் உள்ளது.
இதன் அக்சலரேசன் 0-100 கி.மீ. என்ற வேகத்திற்கு செல்ல வெறும் 9.7 நொடிகளே தேவைப்படுகிறது.
ஃபேண்டம் ப்ளாக், போலார் ஒயிட், மரினா ப்ளூ, டைப்ஃபூன் சில்வர், போலார் ஒயிட்டுடன் கூடிய ஃபேண்டம் ப்ளாக் ரூஃப் ஆகிய கலர் வேரியண்டுகளில் இந்த கார்கள் விற்பனைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் உள்ள 11 மெட்ரோக்கள் மற்றும் பெருநகரங்களில் உள்ள 15 டீலர்கள் மூலமாக விற்பனைக்கு வருகிறது இந்த கார்.