New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/04/b660.jpg)
india covid 19 tracker how to set up aarogya setu app android ios
india covid 19 tracker how to set up aarogya setu app android ios
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் தடமறிய (tracking) உருவாக்கப்பட்ட இந்திய அரசின் அதிகாரப்பூர்வ ஆப்பான Aarogya Setu ஆண்ட்ராய்ட் (Android) மற்றும் iOS கைபேசிகளுக்கு கிடைக்கிறது. இந்த ஆப் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (Ministry of Electronics and Information Technology’s -MeitY’s) தேசிய தகவல் மையத்தால் (National Informatics Centre) உருவாக்கப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, Google Play Store ல் இருந்து மட்டும் 50 மில்லியன் தடவைகளுக்கும் மேல் இந்த ஆப் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. App store பதிவிறக்கங்களின் எண்ணிக்கையை காட்டாது, ஆனால் Aarogya Setu மேடையில் உள்ள இலவச ஆப்களில் முதல் இடத்தில் உள்ளது.
இந்த தொடர்பு தடமறியும் ஆப்பை குடிமக்கள் தங்கள் ஸ்மார்ட் கைபேசிகளில் பதிவிறக்கம் செய்துக் கொள்ள இந்திய அரசு குறுஞ்செய்தி அனுப்பி வலியுறுத்தி வருகிறது. கரோனா வைரஸால் ஏற்படும் ஆபத்தை மதிப்பிடுவதற்கு “Aarogya Setu ஆப் உங்களுக்கு உதவுகிறது, எனவே இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள் என அந்த குறுஞ்செய்தி கூறுகிறது.
மொபைல் ஆப்பில் உள்ள கருத்துகள் பிரிவில் அதிக கவனம் செலுத்துகிறது யூடியூப்
இந்த ஆப்பை பயன்படுத்தும் பயனர்கள், கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் யாரையாவது அருகில் சந்தித்திருந்தால் அது தொடர்பாக பயனர்களை தெரியப்படுத்துவதே இந்த ஆப்பின் நோக்கமாகும். இந்த ஆப் கைபேசியின் location மற்றும் Bluetooth connectivity ஐ பயன்படுத்தி பயனரின் இயக்கங்களை கண்டறியவும் கண்காணிக்கவும் செய்யும்.
Aarogya Setu app ஐ எவ்வாறு நிறுவுவது
Aarogya Setu app ல் பதிவு செய்வது மிகவும் எளிது. முதலில் இந்த அப்ளிகேஷனை Play Store அல்லது App Store ல் இருந்து பதிவிறக்கம் செய்து உங்கள் கைபேசியில் நிறுவிக் கொள்ளவும். அடுத்து அதை திறக்கவும். அடுத்து இது உங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்யச் சொல்லும். உங்களுக்கு வசதியான மொழியை தேர்வு செய்து அடுத்து பொத்தானை அழுத்தவும். இந்த ஆப் ஆங்கிலம் மற்றும் பல இந்திய மொழிகளை ஆதரிக்கும்.
இந்த ஆப் எவ்வாறு வேலை செய்கிறது என்பது குறித்தும் இதன் நோக்கம் குறித்து பல பக்கங்களில் விளக்கப்பட்டிருக்கும். இதை ஸ்வைப் செய்து கடைசி பக்கத்துக்கு சென்று கீழே உள்ள ‘Register Now’ பொத்தானை அழுத்தவும். இந்த ஆப் உங்கள் கைபேசியில் உள்ள Bluetooth மற்றும் location settings ஐ enable செய்யச் சொல்லும்.
உஷார்! உங்களுக்கு 'அந்த'ரங்க மெயில் வருகிறதா? க்ளிக் பண்ணிடாதீங்க
இதற்கு அனுமதி கொடுத்து முன்செல்லவும். Aarogya Setu ஆப்பில் பதிவு செய்ய உங்கள் கைபேசி எண்ணை உள்ளீடு செய்யச் சொல்லும். உங்கள் கைபேசியில் ஒரு OTP வரும் அதை தானாக பயன்படுத்தி ஆப்பின் உள் நுழையும். ஒரு வேளை அந்த OTP ஐ அடையாளம் கண்டு கொள்ளவில்லை என்றால் அந்த OTP ஐ தட்டச்சு செய்து உள்ளீடு செய்யவும்.
அவ்வுளவு தான் நீங்கள் இப்போது Aarogya Setu appல் பதிவு செய்துவிட்டீர்கள். இப்போது நீங்கள் சுய மதிப்பீட்டு சோதனையை செய்து முடிவை அரசுக்கு சமர்பிக்கலாம். நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையையும் இந்த ஆப்பில் அறிந்துக் கொள்ளும் வசதியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.