Advertisment

உஷார்! உங்களுக்கு 'அந்த'ரங்க மெயில் வருகிறதா? க்ளிக் பண்ணிடாதீங்க

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India now among the top 10 sextortion email source countries

India now among the top 10 sextortion email source countries

பிரிட்டிஷ் சைபர் செக்யூரிட்டி நிறுவனமான சோஃபோஸின் (SophosLabs)  ஆராய்ச்சியாளர்கள், செப்டம்பர் 2019 மற்றும் பிப்ரவரி 2020 க்கு இடைப்பட்ட அனுப்பப்பட்ட மில்லியன் கணக்கான செக்ஸ்டோர்ஷன் (sextortion) ஸ்பேம் மின்னஞ்சல்களின் தரவைக் கண்டறிந்ததில், இந்தியா முதல் 10 செக்ஸ்டார்ஷன் அஞ்சல் மூல நாடுகளில் ஒன்று என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

Advertisment

ஒட்டுமொத்த செக்ஸ்டார்ஷன் மின்னஞ்சல்களில் 3.73 சதவிகிதத்துடன் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. வியட்நாமுக்கு 7.01 சதவீதத்துடன் முதல் இடத்திலும், பிரேசில் இரண்டாவது இடத்தில் (5.89 சதவீதம்), அர்ஜென்டினா மூன்றாவது இடத்திலும் (4.76 சதவீதம்), கொரியா நான்காவது இடத்திலும் (4.76 சதவீதம்) உள்ளன.

‘வாட்ஸ் ஆப்’ தி கிரேட்: 8 நபர்களுடன் இப்போது வீடியோ கால் உரையாடல் வசதி

இந்த மோசடிகளை உலகெங்கிலும் அனுப்புவதற்கு, botnets (இணையத்துடன் இணைக்கப்பட்ட சாதனங்களின் எண்ணிக்கை) குறிப்பிட்ட கம்ப்யூட்டர்களை உலகளாவிய மோசடியாளர்கள் பயன்படுத்தினர் என்று சோபோஸ்லாப்ஸ் அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. அறிக்கையின்படி, வியட்நாம், பிரேசில், அர்ஜென்டினா, கொரிய குடியரசு, இந்தியா, இத்தாலி, மெக்ஸிகோ, போலந்து, கொலம்பியா மற்றும் பெரு ஆகியவை ஸ்பேம் செய்திகளை அனுப்ப இந்த குறிப்பிட்ட கணினிகள் பயன்படுத்தப்பட்ட முதல் 10 நாடுகள் என்று தெரிவித்துள்ளது.

செக்ஸ்டார்ஷன் என்றால் என்ன?

செக்ஸ்டோர்ஷன் என்பது பரவலாகப் பயன்படுத்தப்படும் ஸ்பேம் தாக்குதல் வார்த்தையாகும், அதாவது, சைபர் கிரிமினல்கள் பயனர்களின் அந்தரங்க படங்கள் அல்லது அவர்களின் பாலியல் செயல்பாட்டின் சான்றுகள் இருப்பதாகக் கூறி மிரட்டி பணம் பறிப்பது ஆகும். பணத்தை செலுத்தாவிட்டால், அத்தகைய படங்களை பயனரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்புவோம் என்று மிரட்டுவார்கள்.

Insight Counterpoint Technology ஆய்வாளர் சத்யஜித் சின்ஹா இந்தியன்எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், "செக்ஸ்டோர்ஷன் மின்னஞ்சல் வேறு எந்த ஆன்லைன் பித்தலாட்டத்தில் இருந்தும் வேறுபட்டதல்ல. இது ransomware மின்னஞ்சல்களின் துணைப்பிரிவாகும். உங்களுக்கு மெயிலில் அனுப்பப்படும் லிங்கை க்ளிக் செய்யும் போது அல்லது செயல்படுத்தும்போது கணினியை ஹேக் செய்யப்பட்டுவிடும்”

“டிஜிட்டல் நாணயத்தின் பயன்முறையாக கிரிப்டோகரன்ஸிகளைப் பயன்படுத்துவதே இந்த போக்காகும், இது கிட்டத்தட்ட கண்டுபிடிக்க முடியாதது. எனினும், இந்த நிதிகள் இருள் உலகத்தில் உள்ள மற்ற அனைத்து இணைய குற்றச் செயல்களுக்கும் பயன்படுத்தப்படலாம்," என்று அவர் மேலும் கூறினார்.

பணம் எங்கே செல்கிறது?

publive-image

தாக்குதல் நடத்தியவர்களின் பிட்காயின் வாலட்களில் பணம் வருவதைக் கண்காணிக்க சோஃபோஸ்லாப்ஸ் ஆராய்ச்சியாளர்கள் சைபர்டிரேஸுடன் இணைந்து பணியாற்றினர். மோசடிக்காரர்களுக்கு கிடைக்கப்பெறும் பணம், திருடப்பட்ட கிரெடிட் கார்டு டேட்டாவை வாங்குவது மற்றும் இருள் வலை மார்க்கெட்டுகளில் பரிவர்த்தனை செய்வது போன்ற பிற சட்டவிரோத நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படுவதை அவர்கள் கண்டறிந்தனர்.

கொரோனா வைரஸில் பயமுறுத்தும் சைபர் கிரிமினல்கள்

சைபர் கிரிமினல்கள் உலகெங்கிலும் உள்ள மக்களை குறிவைக்கும் ஒரு கருவியாக கொரோனா வைரஸ் பயத்தை பயன்படுத்துகின்றனர். அவர்கள் COVID-19 தொடர்பான தீங்கிழைக்கும் வலைத்தளங்கள் மற்றும் பயன்பாடுகளை உருவாக்கி, கணினிகளை ஹேக் செய்ய போலி COVID-19 கண்காணிப்பு டாஷ்போர்டுகளை அமைத்து வருகின்றனர், WHO அதிகாரிகளாக காட்டிக் கொண்டு, இணைய தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர், கொரோனா வைரஸ் பற்றிய போலி பிரச்சாரங்களை நடத்துகின்றனர்.

பணத்தை செலுத்தாவிட்டால் சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தை கொரோனா வைரஸால் பாதிக்க வைப்பதாகக் கூறி மிரட்டி, பணம் பறிப்பதற்காக கொரோனா வைரஸ் பயத்தையும் அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

அரட்டை அனுபவத்தை வேடிக்கை ஆக்கலாம்: வாட்ஸ் ஆப் புதிய ‘Together at Home’ ஸ்டிக்கர்கள்

“COVID -19 இன் போது, பாதிக்கப்படக்கூடிய பயனர்களுக்கு சைபர் கிரிமினல்கள் எச்சரிக்கையாக இருக்கிறார்கள், அவர்கள் யாரையும் குறிவைப்பார்கள், ”என்று சின்ஹா கூறினார்.

மேலும், கொரோனா வைரஸ் லாக் டவுன் போது பணியாளர்களில் ஒரு பகுதியினர் வீட்டிலிருந்து வேலை செய்வதால், சைபர் கிரிமினல்கள் இந்த குழுவை குறிவைக்க தீவிரமாக முயற்சி செய்கின்றனர்.

"கொரோனா வைரஸ் லாக்டவுன் மத்தியில், பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்து வேலை  செய்வதை அதிகப்படுத்தி வருகின்றன" என்று சின்ஹா கூறினார். "பல ஊழியர்கள் திடீரென தொலைதூரத்தில் பணிபுரிவது ஒரு நிறுவனத்திற்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது. இது பல இணைய பாதுகாப்பு சிக்கல்களை முன்வைக்கிறது. மேலும், பாதுகாப்பற்ற சாதனங்களுடன் அதிகமானவர்கள் இப்போது ஆன்லைனில் உள்ளனர்" என்றும் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment