அரட்டை அனுபவத்தை வேடிக்கை ஆக்கலாம்: வாட்ஸ் ஆப் புதிய ‘Together at Home’ ஸ்டிக்கர்கள்

WhatsApp Updates : புதிய ஸ்டிக்கர்களை பயன்படுத்தும் விதத்தில் முதலில் வாட்ஸ் ஆப்பை update செய்துக் கொள்ளுங்கள். Google Play store மற்றும் Apple store...

WhatsApp ‘Together at Home’ stickers : கோவிட்-19 தொற்றை சமாளித்து வீட்டிலிருந்து வேலை பார்க்கும் மக்கள் உறுதியோடு இருப்பதற்கு உதவ வாட்ஸ் ஆப் முக்கியமான நடவடிக்கைகளை சில காலமாக எடுத்து வருகிறது. சமீபத்தில் இந்த உடனடி செய்தியிடல் தளம் அடிக்கடி forward செய்யப்படும் செய்திகளுக்கு ஒரு வரைமுறையை கொண்டுவந்தது. இப்போது மக்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு இணைந்து இருப்பதற்கு உதவுவதற்காக வாட்ஸ் ஆப் உலக சுகாதார நிறுவனத்தோடு (World Health Organization WHO) இணைந்து “Together at Home”. என்ற ஒரு ஸிடிக்கர் பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.


வாட்ஸ் ஆப் தனது முதல் ஸ்டிக்கர் தொகுப்பை கடந்த 18 மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியது. அதிலிருந்து மக்கள் இந்த வேடிக்கை மற்றும் சுவாரஸ்யமான ஸ்டிக்கர்களை ஒருவருக்கொருவர் தொடர்புக் கொள்ள மற்றும் அரட்டை அனுபவத்தை வேடிக்கை மற்றும் மகிழ்ச்சியாக்க பயன்படுத்தி வருகின்றனர்.

கூகுள் குரோம் பயன்படுத்துகிறீர்களா? உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை

கோவிட்-19 தொற்று காலம் முழுவதும் மட்டுமல்லாது அதற்கு பிறகும் மக்கள் இணைந்திருக்க இந்த புதிய “Together at Home” ஸ்டிக்கர் உதவ வேண்டும் என்பதே வாட்ஸ் ஆப்பின் நோக்கமாகும். இது போன்ற ஸ்டிக்கர்கள் வேடிக்கையானவை, கல்வியளிப்பவை மற்றும் உலகளாவியது மொழி, வயது மற்றும் பிற தடைகளை உடைப்பவை, என வாட்ஸ் ஆப் குறிப்பிடுகிறது.

சமூக விலகல், இதை நாம் ஒன்றினைந்து செய்வோம், all high-five, Ok, கைகளை கழுவு, வீட்டில் இரு, வீட்டிலிருந்து வேலை செய் மற்றும் இன்னும் பலவற்றை உள்ளடக்கியதாக இந்த புதிய Together at Home ஸ்டிக்கர் பாக் உள்ளது. நாடுமுழுவதும் உள்ள ஊரடங்கு காரணமாக பயனர்கள் வீட்டிலிருப்பதை ஊக்கப்படுத்தும் விதமாகவே அனைத்து ஸ்டிக்கர்களும் உள்ளன.

வாட்ஸ் ஆப்பில் எப்படி ஸ்டிக்கர்களை அனுப்புவது?

புதிய ஸ்டிக்கர்களை பயன்படுத்தும் விதத்தில் முதலில் வாட்ஸ் ஆப்பை update செய்துக் கொள்ளுங்கள். Google Play store மற்றும் Apple store மூலமாக.

ஒரு அரட்டையை (chat) திறந்து தட்டச்சு செய்யும் ‘bar’ ஐ சொடுக்கவும். அடுத்து “+” option.

வாட்ஸ் ஆப் புதிய அம்சங்கள் : விடியோ காலிங் முதல் forwarded messages வரை

கிடைக்கும் ஸ்டிக்கர்கள் பிரிவுக்கு சென்று அங்கிருந்து “Together at home” ஸ்டிக்கர் பாக்கை பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும்.

ஸ்டிக்கர் பாக்கை பதிவிறக்கம் செய்த பிறகு “My stickers” பிரிவுக்கு செல்லவும்.

மீண்டும் அரட்டை பகுதிக்கு சென்று ‘Together at home’ ஸ்டிக்கர் பாக்கை தேர்ந்தெடுக்கவும். நீங்கள் இப்பொது புதிய ஸ்டிக்கர்களை பார்க்க முடியும். எந்த ஸ்டிக்கரை அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை தேர்வு செய்து அனுப்பவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close