இன்ஸ்டாகிராமின் புதிய அப்டேட் : மகிழ்ச்சியில் நெட்டிசன்கள்!

பூமரேங் மற்றும் சூப்பர் ஸூமுக்கு அடுத்த இடத்தில் இந்த லே அவுட் ஆப்சன் இருக்கும். லே அவுட்டிலும் சில ஆப்சன்கள் உள்ளன.

Instagram new Layout option
Instagram new Layout option

Instagram new Layout option :  தினம் தினம் இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்கள் வெளியாவது ஒன்றும் செய்தியில்லை. ஆனால் ஒரே நேரத்தில் ஆறு புகைப்படங்களை ஸ்டோரியில் அப்டேட் செய்வது தான் புதிய அப்டேட். சமீபத்தில் ஃபேஸ்புக் லோகோவுடன் கூடிய புதிய லோகோவை அப்டேட் செய்திருந்தது இன்ஸ்டாகிராம்.

சி.ஏ.ஏ-க்கு எதிராக தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம்…

Safety feature கொண்டு வந்ததால் ஆர்டிஃபிசியல் இண்டெலிஜன்ஸ் மூலமாக சர்ச்சைக்குரிய கருத்துகளை நீக்க இயலும். தற்போது மீண்டும் புதிதாக ஒரு சிறப்பம்சத்தை அப்டேட் செய்திருக்கிறது இன்ஸ்டாகிராம். அதன்படி நாம் ஸ்டோரி ஷேர் செய்யும் போது ஒரு புகைப்படங்களுக்கு பதிலாக கொலாஜ் வகையில் 6 போட்டோக்கள் வரை அப்டேட் செய்து கொள்ளலாம். ஒரு ஸ்டோரியில் ஒரு ஃபோட்டோ மட்டுமே பதிவு செய்யும் வகையில் இருந்தது மாற்றம் செய்யப்பட்டு தற்போது 6 புகைப்படங்கள் வரை அப்டேட் செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Instagram new Layout option மூலம் ஒரே ஸ்டோரியில் 6 புகைப்படங்களை அப்டேட் செய்வது எப்படி?

இந்த சிறப்பம்சங்களை பெறுவதற்கு நீங்கள் முதலில் உங்களுடைய இன்ஸ்டாகிராமை அப்டேட் செய்யுங்கள்.

ஆப்-பினை அப்டேட் செய்த பிறகு யுவர் ஸ்டோரியை க்ளிக் செய்யவும். பிறகு கீழ் இருந்து ஸ்லைட் செய்ய ஆப்சன்கள் தோன்றும். அப்போது ‘லே அவுட்’ என்ற ஆப்சன் வரும். அந்த ஆப்சனை தேர்வு செய்து உங்களுக்கு தேவையான புகைப்படங்களை நீங்கள் அப்லோட் செய்ய முடியும்.

பூமரேங் மற்றும் சூப்பர் ஸூமுக்கு அடுத்த இடத்தில் இந்த லே அவுட் ஆப்சன் இருக்கும். லே அவுட்டிலும் சில ஆப்சன்கள் உள்ளன. உங்களுக்கு விருப்பமான ஆப்சன்களை தேர்வு செய்து நீங்கள் உங்கள் புகைப்படங்களை நீங்கள் அப்லோட் செய்து கொள்ளலாம்.

ஒரு ஸ்டோரியில் 6 புகைப்படங்களை மட்டுமே கொலாஜ் செய்ய இயலும். அதற்கு மேலே என்றால் புதிய ஸ்டோரியாக தான் க்ரியேட் செய்ய முடியும்.

சில குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே தற்போது இந்த ஆப்சன் உள்ளது. அனைவருக்கும் கூடிய விரைவில் இந்த அப்டேட்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : 144 மெகா பிக்சல்கள் கொண்ட கேமரா சென்சார்… அறிமுகம் செய்ய காத்திருக்கும் சாம்சங்!

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Instagram new layout option lets you add up to six photos in a story

Next Story
144 மெகா பிக்சல்கள் கொண்ட கேமரா சென்சார்… அறிமுகம் செய்ய காத்திருக்கும் சாம்சங்!Samsung 144MP camera sensors
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express