இன்று சர்வதேச பாஸ்வேர்ட் தினம்… நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியவை என்னென்ன?

ஆண்டுதோறும் மே மாதம் முதல் வியாழக்கிழமை, சர்வதேச பாஸ்வேர்ட் தினமாக அங்கீகரித்துள்ளனர் நமது இணைய ஆர்வலர்கள்.

By: May 2, 2019, 4:34:07 PM

International Password Day : ஆன்லைன் வர்த்தகம், பேஸ்புக், இமெயில் என நமது அன்றாட பயன்பாட்டில் உள்ள பாஸ்வேர்ட்களை நாம் எப்போது கடைசியாக மாற்றினோம்…  பாஸ்வேர்டின் பயன்பாட்டை ஆராய்ந்து அதை வலிமையான ஒன்றாக மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆண்டுதோறும் மே மாதம் முதல் வியாழக்கிழமை, சர்வதேச பாஸ்வேர்ட் தினமாக அங்கீகரித்துள்ளனர் நமது இணைய ஆர்வலர்கள்..

இணையவெளியில் சிறந்த பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். மற்றும் இணைய பயனாளர்களிடையே, நல்ல, வலிமையான பாஸ்வேர்ட்களை வைத்துக்கொள்ளும் மனப்பாங்கு வரவேண்டும் என்பதே, இந்த பாஸ்வேர்ட் தினத்தை கொண்டாடுவதன் நோக்கம் ஆகும்.

நமக்கு எளிமையானதாகவும், அதேசமயத்தில் மற்றவரால் ஊகிக்க முடியாதவகையில் இருப்பதே சிறந்த பாஸ்வேர்ட் ஆகும். இந்த பாஸ்வேர்ட்களை குறிப்பிட்ட காலஇடைவெளிக்குள் மாற்றிக்கொண்டே இருக்கவேண்டும்.

இமெயில், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், ஆன்லைன் ஷாப்பிங், வங்கி பயன்பாடு உள்ளிட்டவைகளுக்கு என ஒரே பாஸ்வேர்ட்களை பயன்படுத்த கூடாது. அதிகப்படியான பாஸ்வேர்ட்களை பயன்படுத்துவர்கள் குழப்பங்களை தவிர்க்க பாஸ்வேர்ட் மானேஜர்களை பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க : உலக வன தினமும் இந்திய வனங்களில் இருந்து வெளியேற்றப்படும் வனவாசிகளும்!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:International password day things you should keep in your mind

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X