கடந்த வருடம் வெளியான ஐபோன்களை விட 11 சீரியஸ் போன்களின் விலை குறைவு தான்!

Apple iPhone 11, 11 Pro, 11 Pro Max vs iPhone XR, iPhone XS Price in India : ஏறவும் இல்லை… இறங்கவும் இல்லை… ஒரே விலை தான்.

iphone 11, iphone 11 pro, iphone 11 max pro, iphone 11 pro max, iphone 11 price in india, iphone 11 launch, iphone 11 launch date, iphone 11 specifications, iphone 11 features, iphone 11 pro price in india, iphone 11 pro specs, iphone 11 pro max, iphone 11 pro max price in india, iphone xr, iphone 11 india price, apple iphone 11, apple iphone 11 price
iphone 11, iphone 11 pro, iphone 11 max pro, iphone 11 pro max, iphone 11 price in india, iphone 11 launch, iphone 11 launch date, iphone 11 specifications, iphone 11 features, iphone 11 pro price in india, iphone 11 pro specs, iphone 11 pro max, iphone 11 pro max price in india, iphone xr, iphone 11 india price, apple iphone 11, apple iphone 11 price

2018ம்  ஆண்டு வெளியான ஐபோன்களுக்கும் நேற்று வெளியான ஐபோன்களுக்கும் அப்படி ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். சென்ற முறையைக் காட்டிலும் இம்முறை வெளியான போன்களின் விலை கொஞ்ச்ம் குறைவாக இருக்கிறது. அல்லது அதற்கு நிகராக இருக்கிறது.

புதிய ஐபோன்களில் என்னென்ன வசதிகள்- வீடியோ

கடந்த முறை வெளியான போன்கள்

கடந்த ஆண்டு ஐபோன் XR, ஐபோன் XS, ஐபோன் XS Max போன்கள் கடந்த ஆண்டு வெளியானது.

இந்த ஆண்டு வெளியான போன்கள்

நேற்று ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் போன்கள் நேற்று வெளியானது. கடந்த ஆண்டு வெளியான ஐபோன் XR போனின் அப்கிரேட் தான் ஐபோன் 11 என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று ஆப்பிள் ஈவண்டில் வெளியான டிவைஸ்கள் ஒரு பார்வை

Apple iPhone 11 vs iPhone XR India prices

ஐபோன் 11-ன் போனின் ஆரம்ப விலை ரூ. 64,900 (64 ஜிபி) மற்றும் 256 ஜிபி போனின் விலை ரூ. 69,900 மற்றும் 512 ஜிபி போனின் விலை ரூ. 79,900க்கு விற்பனையாக உள்ளது. கடந்த ஆண்டு வெளியான iPhone XR-ன் ஆரம்ப விலை இதன் ஆரம்ப விலையை விட மிக அதிமகாக இருந்தது. 64ஜிபி ரேம் கொண்ட போனின் விலை ரூ.76,900 (தற்போது ரூ.49,000க்கு விற்பனையாகிறது). 128ஜிபி போன் ரூ.81,900 என்ற விலையில் அறிமுகமானது. தற்போது ரூ. 54,900க்கு விற்பனையாகிறது. 256ஜிபி ரேம் போன் ரூ. 91,900-க்கு அறிமுகமானது.

Apple iPhone 11 Pro vs iPhone XS India prices

ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோவின் ஆரம்ப விலையே ரூ.99,900 ஆகும் (64ஜிபி வேரியண்ட்). 256ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ. 1,13,900. 512ஜிபி ரேம் கொண்ட போனின் விலை ரூ. 1,31,900 ஆகும் . கடந்த ஆண்டு வெளியான XS விலையோடு இதை ஒப்பீடு செய்வோம் எனில், 64ஜிபி போன் எந்த ஒரு விலை மாற்றமும் இல்லாமல் ரூ.99,900க்கு விற்பனை செய்யப்பட்டது. 256ஜிபி ரேம் போன் ரூ.1,14,900-க்கு (ஆயிரம் ரூபாய் கூடுதலாக) விற்பனை செய்யப்பட்டது. 512ஜிபி போனின் விலை ரூ.1,34,000 என்று அறிவிக்கப்பட்டது.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க 

Apple iPhone 11 Pro Max vs iPhone XS Max India prices

ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் போனின் ஆரம்ப விலையே ஒரு லட்சத்தை தாண்டிவிட்டது. 64ஜிபி போனின் விலை ரூ. 1,09,900 ஆகும். 256ஜிபி போனின் விலை ரூ. 1,23,900 மற்றும் 512ஜிபி போனின் விலை ரூ. 1,41,900 ஆகும். கடந்த வருடம் வெளியான XS Max போன்களின் விலை முறையே ரூ.1,09,900 (64ஜிபி), ரூ. 1,24,000 (256 ஜிபி) மற்றும் ரூ.1,44,900 (512ஜிபி) என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் படிக்க : புகைப்படக் கலைஞர்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ… ஒரே நேரத்தில் நான்கு கேமராக்களிலும் புகைப்படம் எடுக்கலாம்

இந்தியாவில் செப்டம்பர் 13ம் தேதியில் இருந்து நீங்கள் உங்களின் ஐபோன்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். செப்டம்பர் 27ம் தேதியில் இருந்து உங்களுக்கு ஐபோன்கள் விற்பனை செய்யப்படும். பேடிஎம் மால், இந்த ஐபோன்களுக்காக செம்மையான ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. அதில் நீங்கள் ஐபோன் 11 வாங்கினால் 10 ஆயிரம் ரூபாய் வரை கேஷ்பேக்கினை பெறலாம். பர்ப்புள், மஞ்சள், பச்சை, கருப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் அந்த போன்கள் வெளியாகியுள்ளது.

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Iphone 11 iphone 11 pro iphone 11 pro max price launch date in india specifications launch offers apple iphone 11 india prices compared to iphone xr iphone xs

Next Story
புகைப்பட கலைஞர்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ…Six Apple iPhone 12 models could come in 2020
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express