Advertisment

iPhone XS, iPhone XS Max launch: உங்கள் சந்தேகங்களுக்கான பதில்!

iPhone XS, iPhone XS Max launch : ஐபோன் XS விலை 999 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.71,813) முதல் துவங்குகிறது. ஐபோன் XS மேக்ஸ் விலை 1,099 டாலர்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
iPhone XS, iPhone XS Max launch

iPhone XS, iPhone XS Max launch

iPhone XS, iPhone XS Max launch : ஐபோன் நிறுவனம் கடந்த 12ம் தேதி தனது புதிய தயாரிப்புகளை வெளியிட்டது. மூன்று புதிய ஐபோன் மாடல்கள் - ஐபோன் XS, ஐபோன் XS Max மற்றும் ஐபோன் XR ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டது.

Advertisment

ஐபோன் XS மற்றும் XS Max மாடல்கள் கடந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் Xன் அப்கிரேட்டாக வெளியிடப்பட்டது. ஐபோன் XS 5.8 இன்ச் ஸ்க்ரீன், ஐபோன் XS Max 6.5 இன்ச் ஸ்க்ரீன் என வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4ம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மாடலில் முற்றிலும் புதிய வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய எஸ்4 சிப்செட், இ.சி.ஜி.

பரிசோதனை செய்யும் வசதிகளை கொண்டுள்ளது. எட்ஜ்-டு-எட்ஜ் வளைந்த டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட 30% பெரிது என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

இதன் யூசர் இன்டர்ஃபேஸ் பெரிய திரையை முழுமையாக பயன்படுத்தும் படி சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இதை கொண்டு பயனர்கள் ஒருமுறை க்ளிக் செய்து வாட்ச்ஃபேஸ் சேர்க்கலாம். இதனால் வாட்ச் திரையில் பங்கு சந்தை விவரம், இதயத் துடிப்பு மற்றும் ஆக்டிவிட்டி உள்ளிட்ட விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.

புதிய வாட்ச் மாடலின் டிஜிட்டல் கிரவுனில் இம்முறை ஹாப்டிக் ஃபீட்பேக் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இதன் ஸ்பீக்கர்கள் அழைப்புகள், சிரி மற்றும் வாக்கி-டாக்கி உள்ளிட்டவற்றை சிறப்பாக பயன்படுத்த ஏதுவாக 50% அதிக ஒலியை வழங்குகிறது. வாட்ச் பின்புறம் பிளாக் செராமிக் மற்றும் சஃபையர் க்ரிஸ்டல் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 ஜி.பி.எஸ். வேரியன்ட் விலை 399 டாலர்கள் (இந்திய மதி்ப்பில் ரூ.28,686) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் செல்லுலார்+ஜி.பி.எஸ். வேரியன்ட் விலை 499 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.35,875) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 கோல்டு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் சில்வர், ஸ்பேஸ் பிளாக் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மாடல்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 முதற்கட்டமாக 16 நாடுகளில் கிடைக்கும். முன்பதிவு இந்த நாடுகளில் செப்டம்பர் 14-ம் தேதி தொடங்குகிறது. விற்பனை செப்டம்பர் 21-ம் தேதி துவங்குகிறது.

ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR என அழைக்கப்படும் மூன்று மாடல்களில் பல்வேறு புதிய அம்சங்களுடன், ஆப்பிள் சாதனங்களில் முதல் முறை அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது.

ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்களில் முறையே 5.8 இன்ச் மற்றும் 6.5 இன்ச் 458PPI சூப்பர் ரெட்டினா HDR டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த டிஸ்ப்ளே டால்ஃபி விஷன், ஹெச்.டி.ஆர். 19 மற்றும் 120Hz டச்-சென்சிங் சப்போர்ட் கொண்டுள்ளது. இரண்டு மாடல்களிலும் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் புதிய ஐபோன்களில் முதல் முறையாக டூயல் சிம் சப்போர்ட் வசதி டூயல் ஸ்டான்ட்-பை இசிம் மூலம் வழங்கப்படுகிறது. எனினும் சீனாவில் மட்டும் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்படுகிறது.

இந்த புதிய ஐபோன் ஆப்பிள் ஏ12 பயோனிக் 7என்.எம். சிப்செட் மூலம் இயங்குகிறது. இது, முந்தைய ஏ11 பிராசஸரை விட 15% வேகமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 6-கோர் சி.பி.யு. கொண்ட புதிய சிப்செட் 40% குறைந்த மின்சக்தியை பயன்படுத்துகிறது.

இதனால் ஐபோனின் பேட்டரி பேக்கப் முந்தைய மாடல்களை விட அதிக நேரம் கிடைக்கும். புதிய ஐபோன் XS மாடலில் உள்ள ஃபேஸ் ஐடி அம்சம் முந்தைய தொழில்நுட்பத்தை விட வேகமாகவும், அதிக பாதுகாப்பாகவும் இருக்கிறது.

ஆப்பிள் ஐபோன் XS மற்றும் XS மேக்ஸ் ஸ்மார்ட்போன் கோல்டு, சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. ஐபோன் XS விலை 999 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.71,813) முதல் துவங்குகிறது. ஐபோன் XS மேக்ஸ் விலை 1,099 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.79,001) முதல் துவங்குகிறது.

ஐபோன் XS சீரிஸ் முதற்கட்டமாக 30 நாடுகளில் கிடைக்கும். இவற்றுக்கான முன்பதிவு செப்டம்பர் 14-ம் தேதி துவங்கி, விற்பனை செப்டம்பர் 21-ம் தேதி நடைபெறுகிறது. இந்தியாவில் இவற்றின் விலை முறையே ரூ.99,990 மற்றும் ரூ.1,09,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் XR மாடல் வைட், பிளாக், புளு, எல்லோ, கோரல் மற்றும் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை 749 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.53,860) முதல் துவங்குகிறது.

அக்டோபர் 19-ம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படும் ஐபோன் XR இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அக்டோபர் 26-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: ஆப்பிள் ஐபோன் XR, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4: ‘ஐஇ தமிழ்’ ஸ்பெஷல் வீடியோ

Iphone Apple
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment