உலகின் மலிவான 5ஜி போன்: அசத்தலாக வரும் Jio phone 3

Jio phone 3 5g price in india: ஜியோ மொபைலின் விலை ரூ .10,000 என்று நிர்ணயிக்கப்பட்டால், இது உலகின் மலிவான 5 ஜி ஸ்மார்ட்போனாக மாறும்.

Jio phone 3 tamil news

Jio phone 3 tamil news, Jio phone 3 5g price in india: ரிலையன்ஸ் ஏஜிஎம் 2020 நிகழ்வில், முகேஷ் அம்பானி, தனது நிறுவனம் 5ஜி உள்கட்டமைப்பை நாட்டில் அமைத்து வருவதாக அறிவித்து, இந்த நெட்வொர்க் விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என்று கூறினார். கூகுள் உடனான ரிலையன்ஸ் பார்ட்னர்ஷிப் குறித்தும் அறிவித்த அம்பானி, மக்களுக்காக ஆண்ட்ராய்டு ஜியோஃபோனை உருவாக்க கூகுள் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதாகவும் கூறினார். கூகுள் உடன் இணைந்து 4 ஜி மற்றும் 5 ஜி ஸ்மார்ட்போன்களை இந்நிறுவனம் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரவிருக்கும் ஜியோ – கூகுள் ஸ்மார்ட்போன் குறித்து இதுவரை நிறைய விவரங்கள் கிடைக்கவில்லை, ஆனால் ரிலையன்ஸ் வன்பொருளை உருவாக்கும் என்றும் அதற்கான மென்பொருளை கூகுள் வழங்கும் என்றும் கூறப்படுகிறது. நிறுவனம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் அல்லது 2021 இன் தொடக்கத்தில் அதன் 5 ஜி நெட்வொர்க் சாதனத்தை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அம்பானி இன்னும் நெட்வொர்க் மற்றும் மொபைலின் வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

ஜியோவிலிருந்து வரவிருக்கும் மலிவு 5 ஜி ஸ்மார்ட்போன் பற்றி எங்களுக்குத் தெரிந்த அனைத்தையும் நாம் பார்க்கப்போகிறோம்.

Jio phone 3 5g price in india: இது ஜியோ போன் 3 என்று அழைக்கப்படுமா?

ரிலையன்ஸ் இன்னும் வரவிருக்கும் மொபைலின் பெயரை வெளியிடவில்லை. இருப்பினும், இந்த சாதனம் ஜியோபோன் 3 என்று அழைக்கப்படும் என்று சில வதந்திகள் உலா வருகின்றன. இருப்பினும், இந்த வதந்திகள் சில தகுதியைக் கொண்டுள்ளது. அம்பானி தனது ஏஜிஎம் உரையின் போது, ஜியோஃபோன் 4ஜி அதிகளவில் மக்களை சென்றடைந்தது குறித்தும், பின்னர் ஜியோபோன் 2 பற்றியும் பேசினார். அதைத் தொடர்ந்து, நிறுவனத்தின் அடுத்த மலிவு ஸ்மார்ட்போன் 5ஜி நெட்வொர்க்கும் பெரியளவில் சென்றடையும் என்று அவர் கூறினார்.

செல்போன் விலையில் ஸ்மார்ட் டி.வி: உங்கள் முதல் சாய்ஸ் இதுவாகவே இருக்கும்!

விலை என்னவாக இருக்கும்?

வரவிருக்கும் மொபைலின் விலையை ரிலையன்ஸ் குறிப்பிடவில்லை, மொபைல் மலிவு விலையில் இருக்கும் என்று மட்டுமே கூறியுள்ளது. Counterpoint ஆய்வின் படி, நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ .10,000 என நிர்ணயித்து, ஒரு வருடத்தில் சுமார் 60 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய இலக்கு வைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ மொபைலின் விலை ரூ .10,000 என்று நிர்ணயிக்கப்பட்டால், இது உலகின் மலிவான 5 ஜி ஸ்மார்ட்போனாக மாறும். தற்போது, இந்தியாவில் நீங்கள் பெறக்கூடிய மலிவான 5 ஜி சாதனம் ஒன்ப்ளஸ் நோர்டாகும், இதன் ஆரம்ப விலை ரூ .24,999.

5 ஜி சிப்செட்ஸ்

கூகுள் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளதாக ரிலையன்ஸ் வெளிப்படுத்தியது, இந்த சாதனத்தை தயாரிப்பதில் அது மட்டுமே முதலீடு செய்யாது. செலவு குறைவாக இருப்பதை உறுதி செய்ய, ஜியோவுக்கு மலிவு விலையில் 5 ஜி மோடம் மற்றும் மலிவு விலையில் சிப்செட் தேவைப்படும், இங்குதான் ஜியோ-குவால்காம் முதலீடு நடைமுறைக்கு வரும். ஒருங்கிணைந்த 5 ஜி மோடம் கொண்ட சிப்செட்டை உருவாக்க இரு நிறுவனங்களும் ஒன்றிணைந்து, அதன் தற்போதைய மிகவும் மலிவு 5 ஜி சிப்செட்டான ஸ்னாப்டிராகன் 765 ஜி 5 ஜி யை விட மிகவும் மலிவாக உருவாக்கும்.

செல்போன் ஆபத்து..! சேஃப்டியை உறுதி செய்ய இந்த 8 டிப்ஸை மறக்காதீங்க

இயக்க முறைமை (Operating system)

இது entry-level மொபைலாக இருப்பதால், Google இன் Android இயக்க முறைமையின் சமீபத்திய பதிப்பு சரியாக இயங்காது. எனவே, இந்த மொபைலுக்கு ஏற்றவாறு, கூகுள் புதிய OS வழங்க வேண்டும்.

முதலில் 4 ஜி தொலைபேசி

பிசினஸ் இன்சைடரின் அறிக்கையின்படி, ஜியோபோன் 3 இன் புதிய பதிப்பு முதலில் 4 ஜி ஸ்மார்ட்போனாக அறிமுகப்படுத்தப்படும். அதைத் தொடர்ந்து, நிறுவனம் 5 ஜி மாறுபாட்டைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Jio phone 3 tamil news jio phone 3 5g price in india

Next Story
செல்போன் விலையில் ஸ்மார்ட் டி.வி: உங்கள் முதல் சாய்ஸ் இதுவாகவே இருக்கும்!Realme, Smart tv, realme, realme smart tv, realme tv, realme 32-inch tv, realme 43-inch tv, realme review, realme smart tv review, realme smart tv 43-inch review, realme smart tv 43-inch specs, realme smart tv 43-inch price
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com