Mobile phone Tamil News, Mobile phone security tips: கோவிட் -19 நோய்த் தொற்று நம்மில் பலரை வீட்டிலிருந்து வேலை செய்ய கட்டாயப்படுத்துவதற்கு முன்பே, நமது ஸ்மார்ட்போன்களில் ஏராளமான ரகசிய தகவல்கள் இருந்தன. வங்கி கணக்கு தகவல், டிஜிட்டல் வாலட், என அனைத்தும் ஸ்மார்ட்போனில் சேமிக்கப்படுகிறது. ரகசிய தகவல்கள் தவறான கைகளில் கிடைக்காமல் தடுக்க இது அவசியம்.
Mobile phone security tips: எளிய டிப்ஸ் இங்கே
உங்கள் ஸ்மார்ட்போனின் பாதுகாப்பையும் தனியுரிமையையும் அதிகரிக்க உதவும் எட்டு எளிய டிப்ஸ் இங்கே,
உங்கள் தொலைபேசி மற்றும் சமூக ஊடக பயன்பாடுகளுக்கான வலுவான passcode
உங்கள் ஸ்மார்ட்போனுக்கு மட்டும் passcode வைத்திருக்காமல், அனைத்து ஆப்ஸ்-களுக்கும் passcode வைப்பது அவசியம். உங்கள் தொலைபேசியை யாராவது அன்லாக் செய்தாலும், அவர்களால் ஆப்ஸ்-களை திறக்க முடியாது.
உங்கள் மென்பொருளை தவறாமல் புதுப்பிக்கவும்
ஷாப்பிங் அல்லது கேமிங் பயன்பாடுகளிலிருந்து வரும் அறிவிப்புகளைப் புறக்கணிப்பது போன்ற மென்பொருள் அப்டேட்களுக்கான அறிவிப்புகளை நீங்கள் புறக்கணிக்கக்கூடாது. உங்கள் ஸ்மார்ட்போனின் மென்பொருளை (Android அல்லது iOS) புதுப்பிப்பது malware அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
பெரும்பாலான ஸ்மார்ட்போன் பயனர்கள் 24/7 புளூடூத் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், இது ஒரு சாதனத்துடன் இணைக்கப்படாவிட்டால், மற்றவர்கள் உங்கள் தகவல்களை முயற்சித்து அணுகலாம், உங்கள் அழைப்புகளை இடைமறிக்கலாம் மற்றும் மீடியாவை தவறாகப் பயன்படுத்தலாம் என்பதால் புளூடூத்தை தேவைப்படாத நேரத்தில் ஆஃப் பண்ண வேண்டும்.
rooting தவிர்த்தல்
அங்கீகரிக்கப்படாத ஆப்ஸ்-களை பதிவிறக்குவது உங்கள் மொபைலை ஹேக் செய்ய வழிவகுக்கலாம். மொபைலின் ஒரிஜினல் OS (Operating System) பயன்படுத்துவதே அனைத்திற்கும் சிறந்தது.
உங்கள் டேட்டாவை Encrypt செய்தல்
பாஸ்வேர்டுகள் முதல் நமது வங்கி கணக்குகள் வரை அலுவலக ஆவணங்கள் முதல் தனிப்பட்ட தகவல்கள் வரை கிட்டத்தட்ட அனைத்தும் இந்த நாட்களில் ஸ்மார்ட்போனில் சேமிக்கப்படுகின்றன. உங்கள் மொபைலில் டேட்டாவை Encrypt செய்ய இது எல்லா காரணங்களையும் தருகிறது. Android மற்றும் iOS இரண்டுமே உங்கள் தொலைபேசியில் டேட்டாவை Encrypt செய்யக்கூடிய ஆப்ஷன்களை கொண்டுள்ளன.
anti-virus பயன்படுத்தவும்
உங்கள் தனிப்பட்ட கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் ஆன்டி வைரஸை நிறுவ நீங்கள் பயன்படுத்தியதைப் போல, அவை உங்கள் ஸ்மார்ட்போனிலும் நிறுவலாம். anti-virus எதிர்ப்பு உங்கள் மொபைலை malware, தீங்கிழைக்கும் வலைத்தளங்கள், வைரஸ்கள் மற்றும் ஹேக்கிங் முயற்சிகள் ஆகியவற்றிலிருந்து தடுக்கலாம். anti-virus-ஐ தேர்வு செய்ய உங்களுக்கு பல்வேறு ஆப்ஷன்கள் உள்ளன.
பிளேஸ்டோரில் கிடைக்கும் எல்லா ஆப்ஸ்-களையும் கண்ணை மூடிக் கொண்டு டவுன்லோட் செய்யக் கூடாது. அந்த ஆப்ஸ்-களின் மதிப்புரைகளையும் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களையும் அதன் சட்டபூர்வமான தன்மையைக் கண்டறிய முயற்சிக்க வேண்டும்.
மூன்றாம் தர ஆப்-களில் இருந்து ஜாக்கிரதை
எந்த ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் பரிந்துரைக்கப்பட்ட எந்த APK ஃபைலையும் பதிவிறக்க வேண்டாம். உங்கள் ரகசிய தகவல்களைத் திருட இந்த ஆப்ஸ்-கள் உதவி புரியலாம்.. சில நேரங்களில், இந்த பயன்பாடுகள் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் கூடிய அப்டேட்டுகளை கோருகின்றன. இந்த மூன்றாம் தர ஆப்-களைப் பதிவிறக்குவது தவிர்க்கப்பட வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil