ஜியோ செட்டாப் பாக்ஸ்-களில் Amazon Prime ஐ எவ்வாறு நிறுவி பயன்படுத்த வேண்டும்?

Jio Set Top Box Amazon Prime: பல மில்லியன் சந்தாதாரர்களையும் தேர்ந்தெடுக்க பல சிறந்த சேவைகளையும் கொண்டு இயங்கும் ரிலையன்ஸ் ஜியோ மிக பிரபலமான தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனம்.

ரவி வர்மா ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த 11 நடிகைகளும் நடனக் கலைஞர்களும்!

சந்தையில் முக்கியமான இடத்தைப் பிடிக்க இந்நிறுவனம் கடுமையாக உழைத்துள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் சில தயாரிப்புகள் மேம்பட்ட நன்மைகளுடன் கட்டுபடியான விலையில் வருகிறது. அந்தவரிசையில் இந்நிறுவனத்தின் புதிய வரவான செட்டாப் பாக்ஸ், டிடிஎச் (DTH) மற்றும் ஒடிடி (OTT) சேவைகளை எளிதில் அணுகவும் அனுபவிக்கவும் வழி செய்கிறது.

உங்கள் வாட்ஸ் அப் மெசேஜ்களை அடுத்தவர்கள் படிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

இந்த செட்டாப் பாக்ஸ்கள்களில் வழங்கப்பட்டுள்ள பல அம்சங்களில் வாய்ஸ் கால்கள் மற்றும் வீடியோ கால்கள் செய்ய வழங்கப்பட்டுள்ள விருப்பத்தேர்வுகளை எண்ணிவிட முடியும். எனினும் இந்த செட்டாப் பாக்ஸ்களில் உள்ள ஒரு வெளிப்படையான குறைபாடு இதில் நாம் Amazon Prime மற்றும் Netflix ஆப்களை உபயோகிக்க முடியாது. எனினும் ஜியோவில் Hotstar, VOOT, SonyLIV, Voot, ZEE5 போன்ற சேவைகளை ஜியோ டிடிஎச் வழங்குகிறது.

Amazon Prime ஐ எவ்வாறு ஜீயோ செட்டாப் பாக்ஸ் களில் நிறுவி இயக்க வேண்டும்.

செட்டாப் பாக்ஸை ஆன் செய்து மெனுவிலிருந்து பிரவுசர் ஆப்பை கிளிக் செய்யவும்.

தேடல் பொறி (search engine) மூலம் Amazon Prime மற்றும் Netflix ஆப்களை தேடி நம்பகமான வலைதளங்களிலிருந்து எடுக்கவும்.

தேவையான APK பைல்களை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். அவை ’டவுன்லோடட் பைல்ஸ்’ல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

அட்டகாசமாக தனது ஸ்டைலில் துவங்கிய ஆட்டோ எக்ஸ்போ 2020 – ஸ்பெஷல் புகைப்படங்கள்

ஒரு app installer ஐ டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். அதன் மூலம் ஏற்கனவே டவுன்லோடு செய்து வைத்துள்ள Amazon Prime மற்றும் Netflix ஆப்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துங்கள்.

குறிப்பு: ஜியோ செட்டாப் பாக்ஸ் android 9 pie ல் இயங்காத காரணத்தால் சில ஆப்கள் இதில் வேலை செய்யாது. எனினும் Amazon Prime இதில் சரியாக செயல்படுவதாக தெரிகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close