உங்கள் வாட்ஸ் அப் மெசேஜ்களை அடுத்தவர்கள் படிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

WhatsApp Message: பொதுவாக ஸ்மார்ட் போனை லாக் செய்யாமல் எங்கும் எப்போதும் வைத்து விடும் பழக்கம் நம்மில் பலபேருக்கு உள்ளது. சில நேரங்களில் நமது நண்பர்கள் ஏன் நமக்கு தெரியாத அந்நியர்கள் கூட நமது போனை எடுத்து நமது தனிப்பட்ட மெசேஜ்களை படிக்கவோ அல்லது நமது போனை உளவு பார்க்க பயன்படுத்தவோ வாய்ப்புள்ளது. ரவி வர்மா ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த 11 நடிகைகளும் நடனக் கலைஞர்களும்! Whatsapp என்பது நாம் ஒவ்வொருவருக்கும் மிகவும் அந்தரங்கமானது மேலும் நமது […]

WhatsApp Message: பொதுவாக ஸ்மார்ட் போனை லாக் செய்யாமல் எங்கும் எப்போதும் வைத்து விடும் பழக்கம் நம்மில் பலபேருக்கு உள்ளது. சில நேரங்களில் நமது நண்பர்கள் ஏன் நமக்கு தெரியாத அந்நியர்கள் கூட நமது போனை எடுத்து நமது தனிப்பட்ட மெசேஜ்களை படிக்கவோ அல்லது நமது போனை உளவு பார்க்க பயன்படுத்தவோ வாய்ப்புள்ளது.

ரவி வர்மா ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த 11 நடிகைகளும் நடனக் கலைஞர்களும்!

Whatsapp என்பது நாம் ஒவ்வொருவருக்கும் மிகவும் அந்தரங்கமானது மேலும் நமது தனிப்பட்ட வாட்ஸ்அப் கணக்கை வேறு ஒரு நபர் பார்ப்பதை நாம் யாரும் விரும்புவது இல்லை. மிக முக்கியமாக நமது அனுமதி இல்லாமல்.

அட்டகாசமாக தனது ஸ்டைலில் துவங்கிய ஆட்டோ எக்ஸ்போ 2020 – ஸ்பெஷல் புகைப்படங்கள்

ஆண்ட்டுராய்டு பயனாளிகள்

வாட்ஸ் அப் சமீபத்தில் கைரேகை மூலம் அன்லாக் செய்யும் தனியுரிமை அம்சம் ஒன்றை ஆண்ட்டுராய்டு பயனாளிகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் பெயரில் குறிப்பிட்டுள்ளது போல ஆண்ட்டுராய்டு பயனாளிகள் இந்த அம்சத்தை பயன்படுத்தி தங்கள் வாட்ஸ் அப் கணக்கை லாக் செய்துக் கொள்ளும் வசதியை இது வழங்குகிறது. இந்த அம்சத்தை எனேபிள் செய்த பிறகு பயனாளிகள் தங்கள் கைரேகையை பயன்படுத்தி தான் வாட்ஸ் அப் செயலியை அன்லாக் செய்யமுடியும். எந்த வகையான கைரேகை சென்சார் (in-display or rear mounted) உள்ள, அனைத்து ஆண்ட்டுராய்டு கைபேசிகளிலும் இந்த அம்சம் வேலைசெய்யும்.

கைரேகை மூலம் அன்லாக் செய்யும் (unlock with fingerprint) அம்சத்தை செயல்படுத்தியப் பிறகு உங்களைத் தவிர மற்ற எவரும் உங்கள் வாட்ஸ் அப் கணக்கை அன்லாக் செய்து உங்கள் தனிப்பட்ட மெசேஜ்களை படிக்க முடியாது. இந்த அம்சத்தை செயல்படுத்த உங்கள் வாட்ஸ் அப் செயலியை முதலில் அப்டேட் செய்து கொள்ளுங்கள்.

அடுத்து வாட்ஸ் அப்பில் உள்ள செட்டிங்ஸ் ஆப்ஷனை கிளிக் செய்து அக்கவுண்ட் ஆப்ஷனில் உள்ள பிரைவசியை கிளிக் செய்யது கைரேகை மூலம் அன் லாக் (unlock with fingerprint) அம்சத்தை எனேபிள் செய்யவும். இந்த அம்சத்தை எப்போது வேண்டுமானாலும் எனேபிள் அல்லது டிஸெபிள் செய்யும் வசதியுள்ளது.

ஏர்டெல் Vs ஜியோ Vs வோடபோன்: ரூ.250 க்கு குறைவான சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்

ஐபோன் பயனாளிகள்

இதில் கைரேகை மூலம் அன்லாக் செய்யும் வசதி இல்லை. ஆனால் ஸ்கிரீன் லாக் செய்யும் அம்சத்தை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது. அது செட்டிங்ஸ் மெனுவில் இருக்கும். இந்த வசதி கைரேகை மூலம் அன் லாக் செய்யும் வசதியை போலவே செயல்படும். இந்த வசதியை எனேபிள் செய்த பிறகு வாட்ஸ் அப் செயலி ஏற்கனவே பதிவு செய்த முக அடையாளத்தை (face ID) சரி பார்த்த பிறகே ஓப்பன் ஆகும். இந்த ஸ்கிரீன் லாக் வசதியை எனேபிள் செய்ய முதலில் முக அடையாளம் (face ID) ஆப்ஷனை எனேபிள் செய்ய வேண்டும்.

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Watsapp messages smartphone android

Next Story
328 நாட்கள் விண்வெளியில் சாகசம்… பூமி திரும்பினார் க்றிஸ்டினா கோச்!NASA astronaut Christina Koch
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com