56 நாட்களுக்கு ஹை ஸ்பீட் நெட் : IPL-க்கான ஸ்பெஷல் ஜியோ பிளான் ரெடி!

JIO Cricket Data Plans: வாடிக்கையாளர்களுக்காக ‘ஜியோ கிரிக்கெட்’ என்று அழைக்கப்படும் திட்டங்களை வெளியிட்டுள்ளது,

JIO Tamil News, JIO Cricket Data Plans: ரிலையன்ஸ் ஜியோ தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக ‘ஜியோ கிரிக்கெட்’ என்று அழைக்கப்படும் இரண்டு புதிய திட்டங்களை வெளியிட்டுள்ளது, இதன் விலை 499 மற்றும் 777 ரூபாய். இந்த இரண்டு திட்டங்களும் ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவுடன் கிடைக்கைப் பெறுகிறது. இதனால் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனை ஆன்லைனில் பார்க்க முடியும்.

COVID-19 தொற்றுநோயால் ஐபிஎல் 2020 மிக தாமதமாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்குகிறது.

JIO Cricket Data Plans:: ரிலையன்ஸ் ஜியோ ரூ 499 கிரிக்கெட் திட்டம்

ரூ .499 கிரிக்கெட் திட்டத்தின் கீழ், ஜியோ தனது பயனர்களுக்கு 1.5 ஜிபி தினசரி அதிவேக டேட்டாவை 56 நாட்களுக்கு வழங்குகிறது. ஐபிஎல் முழு சீசனையும் நீங்கள் பார்க்கலாம். எனினும், இந்தத் திட்டம் பயனர்களுக்கு அழைப்பு அல்லது எஸ்எம்எஸ் ஆப்ஷன்கள் தரவில்லை. இந்த புதிய திட்டம், ஒரு வருடம் வேலிடிட்டி கொண்ட ரூ .399 மதிப்புள்ள டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவுடன் அளிக்கப்படுகிறது. இது MyJio app பயன்பாட்டைப் பயன்படுத்தியும் பெறலாம்.

வாட்ஸ்அப்பில் என்ன இருக்கு என்ன இல்லை – அறிந்துகொள்ள எளிய பதிவு

ரிலையன்ஸ் ஜியோ ரூ 777 கிரிக்கெட் திட்டம்

ரூ .777 திட்ட ஜியோ கிரிக்கெட் திட்டத்தின் கீழ், நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 5 ஜிபி கூடுதல் டேட்டாவுடன் தினசரி 1.5 ஜிபி அதிவேக டேட்டா வழங்குகிறது. இந்த திட்டம் அன்லிமிட்டட் ஜியோ டூ ஜியோ அழைப்பு, பிற நெட்வொர்க்குகளை அழைக்க 3,000 FUP நிமிடங்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டம் 84 நாட்கள் செல்லுபடியாகும். ரூ 499 திட்டத்தைப் போலவே, இது ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவுடன் வருகிறது.

டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவுடன் வரும் பிற ஜியோ திட்டங்கள்

இவை தவிர, ரிலையன்ஸ் ஜியோ வேறு இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது, அவை ஒரு வருடத்திற்கான complementary டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவுடன் தொகுக்கப்படுகின்றன. விலை ரூ .401 திட்டம் மற்றும் ரூ .2,599.

ரூ .401 திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும், ரூ .2,599 திட்டம் ஒரு வருடம் வேலிடிட்டி கொண்டது.

இந்த 5-ல் ஒரு போன் உங்ககிட்ட இருந்தாப் போதும்… அவசரத்திற்கு டாக்டர் தேவையில்லை

ரூ .401 ப்ரீபெய்ட் திட்டம் தற்போது வாடிக்கையாளர்களுக்கு 3 ஜிபி தினசரி அதிவேக தரவை கூடுதல் 6 ஜிபி டேட்டாவுடன் வழங்குகிறது. இது அன்லிமிட்டட் ஜியோ டூ ஜியோ அழைப்பு, பிற நெட்வொர்க்குகளை அழைப்பதற்கு 1,000 FUP நிமிடங்கள், 100 தினசரி எஸ்எம்எஸ் மற்றும் Jio suite of online apps-க்கான ஆக்ஸஸ் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி subscription-க்கான ஆக்ஸஸ் வழங்குகிறது. பேக் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது.

ரூ .2,599 திட்டத்தின் கீழ், நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி அதிவேக தரவையும் 10 ஜிபி கூடுதல் தரவையும் வழங்குகிறது. இது அன்லிமிட்டட் ஜியோ டூ ஜியோ அழைப்பு மற்றும் 12,000 நிமிட FUP அழைப்பு ஆப்ஷன்கள் தருகிறது. இது அனைத்தையும் தவிர, இந்த திட்டம் 100 தினசரி எஸ்எம்எஸ் மற்றும் Jio suite of online apps-க்கான ஆக்ஸஸ் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி subscription-க்கான ஆக்ஸஸ் வழங்குகிறது. பேக் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Jio tamil news jio tv dream 11 ipl 2020 live jio cricket data plans

Next Story
புது பட்ஜெட் ஸ்மார்ட்போன்: ரெட்மி, ரியல்மிக்கு சவால் விடும் மோட்டோரோலா ஜி9!Smartphones, motorola., moto g9, budget phone, lenovo, realme, xiaomi note9, moto g9, motorola g9, moto g9 features, moto g9 price, moto g9 flipkart
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com