Jio vs Vodafone Vs Airtel Best Prepaid plans under Rs 400 : தங்களின் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதில் மிகவும் போட்டி நிலவுகிறது நெட்வொர்க் நிறுவனங்கள் மத்தியில். ஏர்டெல், வோடபோன், மற்றும் ஜியோ நிறுவனங்கள் வழங்கும் சிறப்பான ப்ரீபெய்ட் சலுகைகள் குறித்து ஒரு பார்வை.
Reliance Jio Rs 399 plan:
ஜியோவின் இந்த பேக் மூலமாக வாடிக்கையாளர்கள் 84 நாட்களுக்கு 1.5ஜிபி டேட்டாவை 4ஜி வேகத்தில் பெற்றுக் கொள்ளலாம். 126ஜிபி மொத்தமாக இந்த ப்ளானில் வழங்கப்படுகிறது. அன்லிமிட்டட் வாய்ஸ் கால் மற்றும் நாள் ஒன்றுக்கு 100 குறுஞ்செய்திகள் உங்களால் அனுப்பிக் கொள்ள இயலும். ஜியோ டிவி, ஜியோ சினிமா அடங்கிய காம்ப்ளிமெண்ட்ரிகளும் இந்த பேக்கின் மூலம் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
Airtel Rs 399 plan :
ஏர்டெல் நிறுவனமும் இதே ரூ. 399 விலையில் ப்ரீபெய்ட் ப்ளான்களை வழங்கி வருகிறது. நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டட் கால்கள், 100 இலவச குறுஞ்செய்தி வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது, நான்கு வாரங்களுக்கு ஷாவ் அக்கெடெம்மியில் கோர்ஸ் ஒன்றினை வழங்கும் இந்த பேக் ஒரு வருடத்திற்கான நார்டன் மொபைல் செக்யூரிட்டி மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ரீமியம் செர்வீஸ்களையும் வழங்கி வருகிறது.
Vodafone Rs 399 plan:
வோடஃபோன் நிறுவனமும் ஏர்டெல் வழங்கும் அதே ஆஃபரைத்தான் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. ரூ. 399 ப்ளான் படி நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டாவை 3ஜி/4ஜி வேகத்தில் வாடிக்கையாளர்களுக்கு வோடஃபோன் வழங்கி வருகிறது. இதன் வேலிடிட்டி 84 நாட்களாகும். இந்த பேக் மூலம் நீங்கள் அன்லிமிட்டட் கால்கள் பேசிக் கொள்ளலாம். நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ்கள் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : அமேசான் ப்ரைம் வீடியோக்களை இனி டிவியில் கண்டு களிக்கலாம்… டிஷ்டிவியின் ஹைபிரிட் செட்-டாப் பாக்ஸ் அறிமுகம்!