/tamil-ie/media/media_files/uploads/2019/08/kia-seltos-1.jpg)
Kia Seltos 2019 Price in India, Specs, Features, Mileage
Kia Seltos 2019 Price in India, Specs, Features, Mileage : இந்தியாவில் தனது முதல் காரினை அறிமுகம் செய்தது கியா நிறுவனம். 'கியா செல்டோஸ்’ - இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒரு கார் இது தான். தென்கொரியா ப்ராண்டான இந்த கார் 2018ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்.யூ.வி கார் ஹூண்டாய் கோனா ஒரு பார்வை…
கியா செல்டோவின் ஆரம்ப விலை ரூ. 9.69 லட்சத்தில் (பெட்ரோல் வேரியண்ட்) துவங்குகிறது. அதிகபட்ச விலையாக ரூ. 15.99 லட்சம் வரை (டீசல் வேரியண்ட்) செல்கிறது இந்த கார். இந்தியாவில் மாபெரும் மார்க்கெட்டை உருவாக்க 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்துள்ளது கியா நிறுவனம். இந்த கார்களின் உற்பத்தி தொழிற்சாலை ஆந்திராவின் ஆனந்தபூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தயாரிக்கப்படும் கார்கள் உள்நாட்டு பயன்பாடு மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதிகளுக்கு அனுப்பப்படும்.
ஹூயூண்டாய் க்ரேட்டா, எம்.ஜி.யின் ஹெக்டோர், டாட்டாவின் ஹாரியர், மற்றும் ஜீப் கேம்பஸ் ரக கார்களுக்கு போட்டியாக களம் இறங்குகிறது இந்த கார். 16 வேரியண்ட்டுகளுடன் கியா செல்டோஸ் 2 பெட்ரோல் மற்றும் 1 டீசல் எஞ்சின் ஆப்சன்களில் வெளியாகியுள்ளது.
சிறப்பம்சங்கள்
1.4 லிட்டர் ஜி.டி.ஐ. டர்போ பெட்ரோல் எஞ்சினை கொண்டுள்ள கார் 138 bhp -யும், 242 என்.எம் டார்க்கையும் உருவாக்குகிறது. 6 - ஸ்பீட் மேனுவலையும், 7 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிசனையும் கொண்டுள்ளது இந்த எஞ்சின். 1.5 லிட்டர் வி.ஜி.டி. டீசல் எஞ்சின் 113 bhp-யும், 250 என்.எம். டார்க்கினையும் தருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.