ரூ.8.64 லட்சம் விலையில் அறிமுகமான கே.டி.எம் 790 ட்யூக்… வாங்குவதற்கு முன்னாடி ரிவ்யூ படிச்சுக்கோங்க!

இருபக்க க்யுக்‌ஷிஃப்டர், ஸ்லிப்பர் க்ளச்சுடன் கூடிய 6 - ஸ்பீட் ட்ரான்ஸ்மிஷனை வழங்குகிறது இந்த பைக்.

By: October 28, 2019, 2:53:41 PM

KTM 790 Duke bike specifications :  வெகுநாள் காத்திருப்புகளுக்கு பிறகு ஒரு வழியாக கே.டி.எம்மின் 790 ட்யூக் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதுவும் 8.64 லட்சம் ரூபாய் விலையில். கே.டி.எம். பைக்குகளுக்காக உருகும் இளைஞர்கள் இந்தியாவில் அதிகம். குறிப்பாக சென்னையில். புள்ளிங்கோவின் அடையாளமாகவே மாறிய ட்யூக் பைக்கின் இந்த மாடலை இவ்வளவு விலை கொடுத்து வாங்க வேண்டுமா என்ற ரிவ்யூ உங்களுக்காக இங்கே…

KTM 790 Duke bike specifications

பேரலல் ட்வின் எஞ்சின், அண்டர்சீட் எக்ஸ்ஹாஸ்ட், மிகப்பெரிய ஸ்விங் ஆர்ம் என பார்ப்பதற்கு பெரிய பீஸ்டாகவே இருக்கிறது இந்த பைக்.

ட்யூக் பைக்குகளில் சீட்டிற்கும் – ஹேண்டில்பாருக்குமான தூரம் மிகவும் குறைவாகவே இருக்கும். ஆனால் இந்த வண்டியில் இரண்டுக்கும் இடையே போதுமான இடைவெளி விட்டு அமைக்கப்பட்டிருப்பது கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது.

டார்க் : 3000 முதல் 6000 வரையிலான ஆர்.பி.எம். ரேட்டில் 87 என்.எம் டார்க்கினை உருவாக்கும்.

இருபக்க க்யுக்‌ஷிஃப்டர், ஸ்லிப்பர் க்ளச்சுடன் கூடிய 6 – ஸ்பீட் ட்ரான்ஸ்மிஷனை வழங்குகிறது இந்த பைக்.

Maxxis Supermaxx ST டையர்கள் இந்த பைக்கிற்கு சூப்பர் க்ளச்சினை வழங்குகிறது.

825 எம்.எம். உயரம் கொண்டிருப்பதாக இந்த பைக் இருப்பதால் உயரம் குறைவானவர்கள் ஓட்டுவதற்கு கொஞ்சம் சிரமமான ஒன்றாக இருக்கிறது. ஆனாலும் இதன் ஸ்லிம் பாடி டிசைன் ஒருவகையில் அவர்களுக்கு உதவும். பில்லியன் கம்ஃபர்ட்டாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : டாட்டா நானோவை ஞாபகப்படுத்தும் டோயோட்டாவின் குட்டி கார்… இந்தியாவில் விரைவில் அறிமுகம்!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Ktm 790 duke bike specifications price availability review

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X